இனி பெங்களூர் ரோட்டில் போகவே முடியாது போலயே! அஞ்சும் வாகன ஓட்டிகள்! துரத்தி வரும் கும்பல்.. திக்திக்
பெங்களூர்: பெங்களூர் சாலைகளில் சமீப நாட்களாக மக்களை சில கும்பல்கள் துரத்தி தாக்கி பணம் பறிப்பது, மோசடி செய்வது அதிகரித்து உள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் முறைகள்தான் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒரு நகரம் வளரும் போது.. அந்த நகரத்தோடு சேர்த்து மக்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்க வேண்டும். ஆனால் உலகம் முழுக்கவே மக்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பதற்கு பதிலாக பெரு நகரங்களில் குற்றங்கள்தான் அதிகரித்துள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, சிட்னி, மும்பை, டெல்லி என்று பெருநகரங்கள் பல குற்றங்களில் கூடாரம் ஆகி உள்ளது.

அந்த வகையில்தான் தற்போது பெங்களூர் மாநகரமும் புதிய விதமான குற்றச்செயல்கள் ஒன்றை சந்திக்க தொடங்கி உள்ளது. சென்னையில் இருப்பதை விட இந்திய குற்றப்பிரிவு ஆவண ரீதியாக பெங்களூரில்தான் அதிக குற்றங்கள் நடக்கிறது. முக்கியமாக போன் ஸ்னாட்சிங், செயின் திருட்டு என்று சாலைகளில் நடக்கும் குற்றங்கள்தான் அதிகம்.
அந்த வகையில்தான் தற்போது புதிதாக சாலைகளில் பொய்யான விபத்து ஏற்படுத்தி, வாகனங்களை வழிமறித்து தாக்கும் புது விதமான குற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன. இந்த குற்றங்கள் எப்படி நடக்கிறது என்று விவரமாக பார்க்கலாம்.
குற்றம் நடக்கும் விதம்: இந்த குற்றத்திற்கு குறி வைக்கப்படுவது கார்கள்தான். பெரும்பாலும் வேறு மாநில ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பர் கொண்ட வாகனங்கள். இந்த கார்கள் ஆள் குறைவாக உள்ள சாலையில் செல்கையில் முதலில் 2-3 ஸ்கூட்டர்கள் அருகில் தொடர்ந்து வரும். அதன்பின் முன்னும் பின்னும், இடது பக்கமும் சென்று.. காரை முந்த விடாமல் அணை கட்டுவார்கள்.
இப்படியே நீண்ட தூரம் செல்வார்கள். நாம் நிறுத்தி கேள்வி கேட்டால்.. நிறுத்திய உடன் முன் பக்கம் வந்து பைக்கால் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டதாக கூறி பணம் கேட்பார்கள். இல்லையென்றால் ஜன்னலை உடைத்து உள்ளே உள்ளவர்களை வெளியே இழுத்து தாக்கி அதன்பின் பணம் கேட்பார்கள்.
நாம் நிறுத்தாமல் அப்படியே மெதுவாக சென்றாலும் பின்பக்கமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்தி பணம் கேட்பார்கள். எப்படியாவது தப்பி யு டர்ன் போட்டு வேறு வழியில் செல்ல முயன்றாலும் பின் தொடர்ந்து வீடு வரை கூட வருவார்கள். 4-5 ஸ்கூட்டரில் இப்படி வண்டிக்கு ரெண்டு பேர் என்று 10 வரை சேர்ந்து செய்யும் மோசடி ஆகும் இது.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை The News Minute ஊடகம் விளக்கி உள்ளது. அவர்கள் செய்தியில், பெங்களூருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருந்து ஆலோசகரான ஆஷிஸ் பரன் மண்டல் காரில் செல்கையில் இதேபோல் சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அவர் பெங்களூரின் அசோகா பில்லரில் இருந்து லால்பாக்கின் மேற்கு வாயில் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பைக்கில் வந்த இருவர் அவரது காருக்குப் பக்கத்தில் வந்து.. தங்களை அந்த கார் மோதிவிட்டதாக கூறி.. , உடனடியாக நஷ்டஈடு வழங்கக் கோரி சண்டை போட்டுள்ளனர். ஆட்களை அழைத்து வந்து காரை சுற்றி நின்று சண்டை போட்டு ரூ 30,000 செலுத்திய பின்னரே விட்டுள்ளனர். அந்த பைக்கை கார் இடிக்கவே இல்லை என்றாலும் இடித்ததாக கூறி இப்படி செய்துள்ளனர்.
இந்த செய்தி ஒரு சம்பவம் அல்ல.. இதேபோல் பல சம்பவங்கள் கடந்த 1- 2 வருடங்களாக பெங்களூரில் அதிகரித்து உள்ளன. பெங்களூர் சாலைகளில் செல்லவே முடியாது என்று மக்கள் அஞ்சும் அளவிற்கு இந்த சம்பவங்கள் அதிகரித்துள்ளன. முக்கியமாக கார்களை குறி வைத்து பல கும்பல்கள் இப்படி குற்றச்செயல்களை செய்ய தொடங்கி உள்ளன.
The News Minute ஊடகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், பயணிகளை குறிவைக்கும் டெல்லியின் மோசமான 'தக் தக்' கும்பலைப் போலவே, இந்த பெங்களூரு மோசடி செய்பவர்கள் பல்வேறு பகுதிகளில் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் ஐடி காரிடாரில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இதுபோல பலர் இந்த கும்பல்களிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூர் போலீசார் இதில் சில கைது நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தாலும் இன்னுமும் இந்த கும்பலை அடக்க முடியாதது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications