Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புலம்பும் ரஷ்யா.. லூனா 25ல் ரூ.1649 கோடி போச்சே! ஜஸ்ட் ரூ.618 கோடியில் சாதித்த சந்திரயான் 3.. செம

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவை முந்தி சென்ற ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. ஆனால் இந்தியாவின் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சாதித்துள்ளது.

இதற்கிடையே தான் இந்தியாவை விட சுமார் ஆயிரம் கோடி வரை ரஷ்யா செலவிட்டதும், இந்தியா மிக குறைந்த செலவில் சந்திரயான் 3யை உருவாக்கி வெற்றி பெற்ற தகவலும் வெளியாகி உள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. சந்திரயான் 3 திட்டம் மூலம் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

India Creates 2 records after Chandrayaan 3 Vikram Lander landing safely on moons

திட்டமிட்டப்படி இந்த விண்வெளி திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது. புவி வட்டபாதையை கடந்த நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் உந்துவிசை கலன், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை சென்றன. இதையடுத்து உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது.

அதன்பிறகு முந்தைய சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்கனவே நிலவின் சுற்றுவட்டபாதையில் வலம் வந்த ஆர்ப்பிட்டருடன் விக்ரம் லேண்டர் தனது தொடர்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்பட ஒட்டுமொத்த இந்தியாவும் பதற்றத்துடன் இருந்த நிலையில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வை தொடங்க உள்ளது. இந்த வேளையில் பிரக்யான் ரோவர் வாகனம் நிலவின் இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் சிம்பளை பொறித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க உள்ளது.

இத்தகைய சூழலில் தான் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா 2 வகையான சாதனைகளை படைத்துள்ளது. அதாவது நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கால்பதித்து இருந்தன.

இந்தியா நிலவில் கால்பதிக்க முயன்ற நிலையில் சந்திரயான் 2 திட்டம் மயிரிழையில் பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது சந்திரயான் 3 திட்டம் மூலம் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் நிலவில் கால்பதித்து இருப்பது ஒரு சாதனையாகும்.

இன்னொரு சாதனை என்னவென்றால் நிலவில் கால்பதித்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தென்துருவத்தின் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை. ஏனென்றால் இது மிகவும் ஆபத்தான பகுதி. இத்தகைய சூழலில் தான் இந்தியா ரிஸ்க் எடுத்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா என்ற பெருமையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தேடிக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்தியாவை ஒப்பிடும்போது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் சுமார் ரூ.1000 கோடி வரை அதிகம் செலவு செய்தும் கூட தோல்வியடைந்துள்ளது. அதாவது ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் உருவாக்கவும், நிலவில் தரையிறங்கும் திட்டத்துக்கும் ரஷ்யா சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலரை செலவிட்டது. இதன் இந்திய மதிப்பு என்பது சுமார் ரூ.1,649 கோடியாகும்.

ஆனால் நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக இந்தியா வெறும் 75 மில்லியன் அமெரிக்கா டாலரை மட்டும் செலவிட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு என்பது சுமார் ரூ.619 கோடியாகும். இதன்மூலம் இந்தியாவை ஒப்பிடும்போது ரஷ்யா சுமார் ரூ.1000 கோடியை அதிகம் செலவிட்டும் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க முடியாமல் பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+