3,000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்ப ”நாள் குறித்தது” குடும்பத்தின் ‘ஆஸ்தான’ ஜோதிடராமே?
பெங்களூர்: 3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடகாவின் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்ப காரணமே குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைதான் என்கின்றன பெங்களூர் தகவல்கள்.
ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்-ன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா. இத்தொகுதியில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 3,000 ஆபாச வீடியோக்கள் 20,000 பென் டிரைவ்களில் அத்தொகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பியது.

இந்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரண நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். அதே நேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் விடுதலையாகி இருந்தாலும் அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி இருக்கிறது சிறப்பு புலனாய்வுக் குழு.
கர்நாடகா அரசியலிலும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் பெரும் பிரளயத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென பிரஜ்வல் ரேவண்ணா தாம் மே 31-ந் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக வீடியோ பதிவு மூலம் தெரிவித்திருந்தார். அதாவது இன்று இரவு பெங்களூருக்கு நள்ளிரவில் வந்து சேருகிறார் பிரஜ்வல். இதனையடுத்து நாளை விசாரணைக்கு அவர் ஆஜராக இருக்கிறார். ஆனால் பெங்களூர் விமான நிலையத்திலேயே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தயாராக இருக்கின்றனர் கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள். இதனால் பிரஜ்வல் ரேவண்ணா முன் ஜாமீன் கோரியுள்ளார்.
இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா திடீரென விசாரணைக்கு ஆஜராகிறேன்; இந்தியா வருகிறேன் என வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை பிரஜ்வல் ரேவண்ணா எதிர்கொள்வதற்காக ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது சில சிறப்பு பயிற்சிகள், கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாம்; அத்துடன் பிரஜ்வல் குடும்பத்தின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை தந்துள்ளார். அவர்தான் மே 31-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகலாம் என நாள் குறித்து கொடுத்தவர் என்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications