கர்நாடகாவில் காங். ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் நடைபெறும்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத கலவரங்கள் நடைபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியலும் வரும்; மத கலவரங்களும் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி என்பது பின்னோக்கியதாகிவிடும்.

கர்நாடகாவில் அரசியல் நிலைத்தன்மையை வாக்காளர்கள் தர வேண்டும். கர்நாடகாவை புதிய பாதையில் பயணிக்க வைக்க பாஜகவால் மட்டுமே முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழல் பெருகிவிடும். சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலையை எடுப்பார்கள்.
இடஒதுக்கீடு என்பது மத அடிப்படையாக இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொன்டவர்கள். ஆகையால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியானது காலாவதியாகிவிட்டது. பாஜகவில் இருந்து செல்கின்ற தலைவர்களை வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது பாஜக.
ஜேடிஎஸ் கட்சிக்கு வாக்களிப்பதும் காங்கிரஸுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். உங்களுடைய வாக்குகளை காங்கிரஸுக்கு செலுத்த விரும்பவில்லை எனில் பாஜகவுக்கு செலுத்துங்கள். அப்போதுதான் கர்நாடகா மாநிலம் வளர்ச்சி அடையும்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் என்பது ஒரு எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலத்தின் எதிர்காலத்தையுமே இந்த தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி கைகளில் ஒப்படைப்பதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தல். ஆகையால்தான் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக திடீரென இந்த 4% இடஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் கர்நாடகாவின் பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத்துகள், ஒக்கலிகா சமூகங்களுக்கு இந்த 4% இடஒதுக்கீடு பிரித்து தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒவ்வொரு கூட்டத்திலுமே 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமித்ஷா பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications