முஸ்லீம் நடத்துனர் குல்லாவை சவுண்ட்விட்டு அகற்றிய பெண்.. பெங்களூர் பஸ்சில் ஷாக்.. வலைவீசும் போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் இயங்கும் பிஎம்டிசி பஸ்சில் பணியின்போது கண்டக்டர் ஒருவர் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தார். இதற்கு பெண் ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்டக்டர் அதனை கழற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி விவாதத்தை கிளப்பி உள்ளது.
பெங்களூர் மாநகர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் பகுதிகளில் பிஎம்டிசி பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் சாதாரண பஸ்கள் முதல் ஏசி பஸ்கள் வரை இயங்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
ವಾಟ್ಸಾಪಲ್ಲಿ ನೋಡ್ದೆ. ಆ ಮಹಿಳೆಯ ಹೃದಯದಲ್ಲಿ ತುಂಬಿದ ಕೋಮು ವಿಷದ ತೀವ್ರತೆಯನ್ನು ಅಳೆಯುವ ಯಂತ್ರವೊಂದಿದ್ರೆ ಅದರ ಮುಳ್ಳುಗಳೇ ಒಡೆದುಹೋಗುತ್ತಿದ್ವೆನೋ?. ಕುಂಕುಮ, ಮಾಲೆಗಳನ್ನು ಧರಿಸುವಂತೆ ಟೋಪಿಗೂ ಅವಕಾಶವಿದೆಎಂದಾಗಿದೆ ನನ್ನ ಭಾವನೆ. ಏನಿದ್ದರೂ ವಿಷ ಕಾರುತ್ತಿರುವ ಮಹಿಳೆಯ ಮುಂದೆಯೂ ಸೌಮ್ಯವಾಗಿ ನಡೆದುಕೊಂಡ ನಿರ್ವಾಹಕರಿಗೆ ನನ್ನದೊಂದು ಸಲಾಂ pic.twitter.com/RFaIXGuq3M
— Mohamed Haneef (@Mohamed47623244) July 11, 2023
இந்த பஸ்சில் இந்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்பட பிற மதங்களை சேர்ந்தவர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதன் விபரம் வருமாறு:
பிஎம்டிசி பஸ் ஒன்றில் கூட்டம் அதிகமாக உள்ளது. வாசற்படியில் கண்டக்டர் நிற்கிறார். கண்டக்டர் தனது தலையில் பச்சை நிறத்தில் ‛ஸ்குல்கேப்' (இஸ்லாமிய மதசடங்குகளின்போது அணியும் தொப்பி) அணிந்துள்ளார். இதை பஸ்சில் பயணித்த பெண் ஒருவர் பார்த்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருக்கும் அந்த ஸ்குல்கேப்பை கழற்றும்படி கூறுகிறார்.

இதுதொடர்பாக அந்த பெண், ‛‛யூனிபார்மில் பணி செய்யும்போது இதுபோன்ற தொப்பியை அணியலாமா?'' என கண்டக்டரை பார்த்து கேள்வி கேட்கிறார். இதற்கு அந்த கண்டக்டர், ‛‛அணியலாம் என நினைக்கிறேன்'' என்று பதிலளிக்கிறார். இதற்கு அந்த பெண், ‛‛உங்களின் மதம் சார்ந்த விஷயங்களை வீட்டில் பின்பற்றி கொள்ளுங்கள்'' என்கிறார்.
அதற்கு கண்டக்டர், ‛‛நான் சில ஆண்டுகளாக இதனை அணிந்து வருகிறேன். இதற்கு இதுவரை யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதனால் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள் '' என பதிலளிக்கிறார். இதற்கு அந்த பெண், ‛‛நீங்கள் பணியின்போது யூனிபார்முடன் இத்தகைய தொப்பியை அணிய இடம் உள்ளதா? நீங்களே சொல்லுங்கள். வீடு அல்லது மசூதியில் அணிந்தால் நான் எதிர்க்க மாட்டேன். இங்கு சட்டத்தில் இடமில்லாவிட்டால் கழற்றி விடுங்கள்'' எனக்கூறினார்.
இதையடுத்து வேறு வழியின்றி அந்த கண்டக்டர் தனது தலையில் இருந்து முஸ்லிம் தொப்பியை அகற்றினார். மேலும் இந்த முழு செயலையும் அந்த பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர்கள் பேசிய விஷயங்கள் பச்சை நிறத்திலான தொப்பி போன்ற துணியை கண்டக்டர் அகற்றுவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ தான் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதில் அந்த பெண்ணின் செயலுக்கும் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆயுத பூஜை வேளையில் பஸ்களுக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பலர் திருநீர், மாலை அணிந்து பஸ் இயக்குகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பெண்ணின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் அந்த பெண்ணின் மீது கண்டிப்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவை முகமது ஹனீப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதை கவனித்த பெங்களூர் மாநகர போலீசார் சம்பவம் நடந்த இடம், பஸ் விபரங்களை வழங்கும்படி தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுபற்றி பிஎம்டிசி தரப்பில் இன்னும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications