வங்கதேசத்தினருக்கு இடமில்லை.. பெங்களூரில் தொழிலாளர்களை விரட்டிவிரட்டி தாக்கிய இந்து அமைப்பினர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வங்கதேசத்தினர் என்று நினைத்து மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் கூடாரங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விரட்டி விரட்டி இந்துத்துவாக அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே ஹூலிமங்களா பகுதியில் வங்கதேசத்தினர் கூடாரம் அமைத்து தங்கி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து தங்கி உள்ளதாக தகவல்கள் பரவின.

in-bengaluru-hidutuva-outfit-members-assaults-migrant-labours-over-alleged-bangladesh-people

இதையடுத்து 'ராஷ்ட்ர ரக்சனா படை' என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் ஹூலிமங்களா பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு சிலர் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

அவர்களிடம் பெயர், விவரங்களை கேட்டனர். அப்போது அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். ஆனால் ராஷ்ட்ர ரக்சனா படையினர் நம்பவில்லை. வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் தான் நீங்கள் என்று கூறி தாக்கினர். இதனால் பயந்து போனவர்கள் அங்கிருந்து ஓடினர். இருப்பினும் அவர்களை விரட்டி விரட்டி தாக்கினர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதலாக மாறியது. உடனடியாக ஹெப்பகோடி போலீசாரக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹெப்பகோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருதரப்பையும் சமாதானம் செய்து வார்னிங் விடுத்தனர்.

இந்த தாக்குதலில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்தனர். இதனால் இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..மேற்குவங்க தொழிலாளர்கள் அளித்த புகாரில் ராஷ்ட்ர ரக்சனா படையை சேர்ந்தவர்கள் மீதும், ராஷ்ட்ர ரக்சனா படையினர் அளித்த புகாரில் மேற்குவங்க தொழிலாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை ராஷ்ட்ர ரக்சனா படையை சேர்ந்த நாகேந்திரப்பா, அமித,சந்நிதி செட்டி, ரஜத் பிரதாப் ராய் ஆகியோரை கைத செய்தனர். அதேபோல் 19 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி எலக்ட்ரானிக் சிட்டி துணை போலீஸ் கமிஷனர் எம் நாராயணா கூறுகையில், ''இந்துத்துவாக அமைப்பினர் சட்டவிரோத தொழிலாளர்கள் என்று நினைத்து தாக்கி உள்ளனர். இப்படி யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. இது கிரிமினல் குற்றம். யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அதுபற்றி போலீசில் புகாரளித்தால் போதும். போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+