‛‛ஒரு மாம்பழம் ரூ.10,000’’.. மியாசாகியால் லட்சாதிபதியான கர்நாடகா விவசாயி.. அப்படி என்ன ஸ்பெஷல்?
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த விவசாயி தனது தோட்டத்தில் விளையும் ‛மியாசாகி' மாம்பழம் ஒவ்வொன்றையும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் அவர் தற்போது லட்சாதிபதியாக மாறியுள்ளார். இந்நிலையில் தான் அவர் விற்கும் ‛மியாசாகி' மாம்பழம் ஒன்று எப்படி ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது? அதன் சிறப்பு என்ன? என்பது பற்றிய சுவாரசிய தகவலை இங்கு பார்க்கலாம்.
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் கல்கேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத் கோன்கார். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் பழங்களை பயிரிட்டுள்ளார். ஒவ்வொரு சீசனிலும் தோட்டத்தில் விளையும் பழங்களை பறித்து விற்பனை செய்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் பிரமோத் கோன்கார் அரியவகை ‛மியாசாகி' மாம்பழம் மூலம் லட்சாதிபதியாகி உள்ளார். அதாவது பிரமோத் கோன்கார் தனது தோட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் இருந்து அரியவகை ‛மியாசாகி' மா கன்றை கொண்டு வந்து தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
தற்போது இந்த மாமரம் காய்க்க தொடங்கி உள்ளது. இந்த ஒரு ‛மியாசாகி' மாமரத்தால் அவர் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் தான் அவர் தனது மரத்தில் விளைந்த ‛மியாசாகி' மாம்பழம் ஒன்றை அங்குள்ள விவசாய கண்காட்சியில் வைத்துள்ளார். இது அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. மேலும் பல விவசாயிகள் அந்த மாம்பழம் பற்றியும், அதன் அறுவடை பற்றியும் கேட்டு செல்கின்றனர்.
இன்னும் சிலர் மாம்பழத்தின் விலையை கேட்டு பிரமிக்கின்றனர். இதுபற்றி பிரமோத் கோன்கார் கூறுகையில், ‛‛நான் 1985 முதல் மாம்பழ வியாபாரம் செய்து வருகிறேன். இதற்காக மாமரங்களை வளர்த்த வருகிறேன். நான் ஒரெயோரு ‛மியாசாகி' மாமரத்தை வளர்த்து வருகிறேன். இது ஜப்பான் நாட்டை மரமாகும். இந்த மாமரம் இங்குள்ள தட்பவெப்ப நிலையை ஏற்றுக்கொண்டு வளர்ந்துள்ளது.
இந்த மரம் ஆண்டுக்கு 14 பழங்களை தருகிறது. சமீபத்தில் ஒரு டஜன் மாம்பழங்களை ரூ.2.50 லட்சத்துக்கு விற்பனை செய்தேன். இந்த பழம் சத்து நிறைந்தது என்பதோடு அரிய வகை பழமாகும். இதனால் அரியவகை பழம் என்பதால் விலை அதிகம். இந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ , பி மற்றும் சி ஆகியவை உள்ளன.
அதோடு சருமத்துக்கு இந்த பழம் சிறந்ததாகும். ஒவ்வொரு மாம்பழமும் 200-350 கிராம் எடையுடன் இருக்கும். கொப்பல் ஒருவரிடம் ஒரு பழத்தை ரூ.10 ஆயிரத்துக்கு விற்றுள்ளேன். ஆனால் கர்நாடகாவை சேர்ந்தவர் இந்த பழத்தை வாங்குவது இல்லை. இதனால் மற்றவர்களிடம் விற்பனை செய்துள்ளேன். பாதுகாப்பு கருதி இந்த மாம்பழத்தின் உண்மையான விலையை என்னால் வெளிப்படையாக கூற முடியாது " என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications