அட பாருங்களேன்.. வீட்டுக்கு நரேந்திர மோடி பெயர்.. கர்நாடக பாஜக தொண்டரின் விசுவாசம்!
பெங்களூர்: கர்நாடகத்தில் பாஜக தொண்டர் ஒருவர் தான் புதிதாக கட்டிய வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு நாளை மறுநாள் (மே 3) கிரகப்பிரவேஷம் நடத்தப்பட உள்ளது. இந்த வீட்டின் படம் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரி டவுன் ககதூர் ரோட்டில் வசித்து வருபவர் ஹாலேஸ். பா.ஜனதா தொண்டரான இவர்பிரதமர் நரேந்திர மோடியின் தீவிரமான தொண்டர்.
இவரது மகள் புவனேஸ்வரி திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஹாலேஸ் தனது மகளுக்காக வீடு கட்ட முடிவு செய்தார்.

மகளுக்காக கனவு இல்லம்
அதன்படி அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்ட துவங்கினார். 2 மாடியாக வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தனது மகளுக்காக கட்டிய கனவு இல்லத்தை அவர் ரசித்து ரசித்து கட்டியுள்ளார். பல்வேறு சொகுசு வசதிகள் செய்யப்ட்டுள்ளன. இந்நிலையில் தான் இவரது வீட்டு படங்கள் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. காரணம் என்னவெனில் இவர் வீட்டுக்கு வைத்த பெயர் தான்.

நரேந்திர மோடியின் பெயர்
அதாவது ஹாலேஸ் தனது மகளுக்காக ஆசையாக கட்டிய வீட்டுக்கு குடும்பத்தினர் யார் பெயரையும் வைக்கவில்லை. மாறாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டியுள்ளார். அதாவது, வீட்டுக்கு ‛நரேந்திர மோடி நிலையம்' என பெயர் சூட்டியுள்ளார். இது கன்னட மொழியில் கல்வெட்டாக வீட்டின் முன்புறம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் நுழைவு பாதையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தையும் அவர் பெரிதாக பதித்துள்ளார்.

நாளை மறுநாள் கிரகப்பிரவேஷம்
இந்த புதிய வீட்டின் கிரகப்பிரவேஷம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. சன்னகிரி எம்எல்ஏ விருபாக்சப்பா வீட்டை திறந்து வைக்கிறார். ஹாலேஸ் மட்டுமின்றி அவரது மகள் புவேனஷ்வரியும் பிரதமர் நரேந்திர மோடியின் பற்றாளர் தான். குஜராத் முதல்வராக இருந்தபோதே நரேந்திர மோடியை அவர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் சமீபத்தில் கியாஸ் மானியத்தை விட்டு கொடுக்க நரேந்திர மோடி கூறிய நிலையில் முதல் ஆளாக ஹாலேஸ் அதை செய்து அவரது ஆதரவாளர் என்பதை நிரூபித்தார்.

என்ன சொல்கிறார் ஹாலேஸ்
இதுகுறித்து ஹாலேஸ் கூறுகையில், ‛‛வீட்டுக்கு சிவாஜி என பெயர் சூட்ட குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன். இதனால் புதிய வீட்டிற்கு அவரது பெயரை வைத்துள்ளேன். இதன்மூலம் நான் பெருமை அடைகிறேன்'' என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications