பிரகாஷ் ராஜுடன் செல்பி எடுத்த மனைவி.. ஆவேசத்தில் கேமராவை பிடுங்கிய கணவர்.. காஷ்மீரில் ஒரு களேபரம்
Recommended Video

பெங்களூரு: "ஏங்க.. என்னையும், மோடியையும் முன்னாடி வச்சிக்கிட்டா நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொது இடத்தில் மனைவியை இப்படி அசிங்கப்படுத்தறது தப்பு" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு நபரை கூப்பிட்டு கண்டித்துள்ளார்.
நடிப்பு துறையிலேயே மூழ்கி கிடந்த பிரகாஷ்ராஜ், திடீரென அரசியலுக்குள் நுழைந்தார். வந்த நாள் முதல், இப்போதுவரை மோடியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்தெடுத்து வருகிறார்.
இதற்கு நடுவில் நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டு, மண்ணை கவ்வினார்.

குல்மார்க்
இந்நிலையில், வெயில் கொளுத்தி வருவதால், குடும்பத்துடன் டூர் போயுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்குதான் சென்றிருக்கிறார். அப்போது ஒரு ஓட்டலில் தங்கியிருந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
|
செல்பி
திடீரென பிரகாஷ்ராஜை ஓட்டலில் பார்த்த ஒரு ரசிகை ஓடிவந்து, "சார்.. உங்களோட ஒரே ஒரு செல்பி எடுத்துக்கறேன்" என்று அனுமதி கேட்டுள்ளார். அதற்கு ஓகே சொன்ன பிரகாஷ்ராஜ், அந்த பெண்ணுடனும், அவருடைய மகளுடனும் சேர்ந்து செல்பியும் எடுத்து கொண்டார்.

சண்டை போட்டார்
இந்த விஷயம், பெண்ணின் கணவனுக்கு தெரிந்து விட்டது.. மனுஷன் ரொம்பவே சூடாகி விட்டார். சந்தேகப்பட்டு திட்டி இருந்தால்கூட ஒருவகையில் ஒத்துக்கலாம். ஆனால் அவர் மனைவி, மகளுடன் சண்டை போட்டதற்கு காரணமே மோடிதான். ஆமாம்.. மோடியேதான்!

அவமானம்
பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பிரதமரை விமர்சித்து வருவதால், அவருடன் செல்பி எடுத்தது தவறு என்று சண்டை போட்டுள்ளார் புருஷன். எல்லாரும் வேடிக்கை பார்க்க, இதனால் அவமானம் அடைந்த மனைவியும், மகளும் அங்கேயே அழ ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவும், பிரகாஷ்ராஜ் முன்னாடியே நடந்ததுதான் ஹைலைட்!
|
அசிங்கப்படுத்தலாமா?
இதைப்பார்த்து பிரகாஷ்ராஜ் ஷாக் ஆகிவிட்டார். அவமானத்தில் பெண் துடிப்பதை புரிந்து கொண்ட பிரகாஷ்ராஜ், பெண்ணின் கணவரை தனியே அழைத்து பேசினார். ''என்னையும், மோடியையும் முன்னிறுத்தியா நீங்க கல்யாணம் செய்துக்கிட்டீங்க? பொது இடத்தில் கட்டின மனைவியை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு" என்று சொல்லி உள்ளார். இதைக் கேட்டதும், அந்த நபர் விருட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டாராம். இந்த சம்பவத்தை மறக்க முடியாத பிரகாஷ்ராஜ், ட்விட்டரிலும் இதை பற்றி பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ், நிம்மதியா குல்மார்க் போகணும்னு நினைச்சால்கூட.. அங்கேயும் மோடி ஏதாவது ஒரு ரூபத்தில வந்திடறார் போல!
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications