பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

IPL ஏலம் நடக்கும்போது..கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்றாங்க பாருங்க -ரோகித் சர்மா வெளியிட்ட புகைப்படம்

By
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஐபிஎல் ஏலம் நடந்துவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த ஏலத்தை டிவியில் பார்த்து வருவதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் திருவிழாவுக்கான ஏலம் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று காலை தொடங்கியது. ஐபிஎல் போட்டியில் இதுவரை 8 அணிகள் மோதின.

இந்த வருடத்தில் இருந்து 2 புதிய அணிகள் ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என்ற இரண்டு அணிகள் புதிதாக சேர்ந்துள்ளன.

நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஐபிஎல் Host.. திடீரென மயங்கி விழுந்தது எப்படி? யார் இந்த ஹக் எட்மைட்ஸ்? நன்றாக பேசிக்கொண்டு இருந்த ஐபிஎல் Host.. திடீரென மயங்கி விழுந்தது எப்படி? யார் இந்த ஹக் எட்மைட்ஸ்?

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

15வது ஐபிஎல் போட்டி இந்த வருடம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணியும் ஏலத்தில் கலந்துகொண்டன. இதுவரை இருக்கும் ஐபிஎல் அணிகள் தங்களிடம் உள்ள பழைய வீரர்களில் நால்வர் வரை அணியில் தக்கவைக்கலாம். புதிய அணிகள் மூவரை தங்கள் அணிக்குள் கொண்டு வரலாம். இதெல்லாம் முடிவடைந்த நிலையில், மீதி வீரர்களுக்கான ஏலத்தில் அனைத்து அணிகளும் கலந்துகொண்டன.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்த ஏலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒன்றாக டிவியில் பார்ப்பதை புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார் இந்தியன் கிரிக்கெட் கேப்டன் ரோகித் ஷர்மா. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளது. அடுத்து, டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

மகிழ்ச்சியான முகம்

மகிழ்ச்சியான முகம்

டி20 போட்டிகள் வரும் 16ம் தேதி நடக்கவுள்ளன. இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவுக்கு செல்லவுள்ளனர். இந்நிலையில், இந்த ஐபிஎல் ஏலத்தை இந்திய வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் ஒன்றாக அமர்ந்து பார்த்து வருகிறார்கள். ''ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சஹல், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்'' ஆகியோர் ஐபிஎல் ஏலத்தைப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு ''சில மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்க முடிகிறது, சில முகங்கள் டென்ஷனில் இருக்கின்றன'' என ரோகித் ஷர்மா பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    Faf Du Plessis goes to RCB, his CSK Journey Ends | IPL 2022 Auction | OneIndia Tamil
     நட்சத்திர வீரர்கள்

    நட்சத்திர வீரர்கள்

    இந்த ஏலத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஷ்வின் 5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு போயுள்ளார், ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிக்கு கொல்கத்தாவுக்கும், ராபின் உத்தப்பா சென்னைக்கு 2 கோடிக்கும், தேவ்தத் படிக்கல் 7.75 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கும், நிதிஷ் ராணா 8 கோடிக்கு கொல்கத்தாவுக்கும், டுவைன் ப்ராவோ 4.45 கோடிக்கு சென்னைக்கும், பாப் டூப்ளசி 7 கோடிக்கு பெங்களூர் அணிக்கும் சென்றுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் எடுக்கவில்லை. பாப் டூப்ளசியை சென்னை அணி எடுக்காததால், சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    English summary
    Indian cricket team captain Rohit Sharma has revealed that Indian cricketers are watching the auction on TV as the IPL auction is underway
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X