பெங்களூரில் ஐடி நிறுவனங்களை மிரட்டும் கன்னட அமைப்பினர்.. டிகே சிவக்குமார் கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ''பெங்களூரில் ஐடி துறையில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதை பொறுத்து கொள்ளமாட்டோம். அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவொரு அமைப்பும் நேரடியாக ஐடி மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செல்ல வேண்டாம். யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்.இத்தகைய சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் தீர்க்கப்பட வேண்டும்'' என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

kannada-people-job-row-all-organisations-not-to-visit-it-companies-warns-dk-shivakumar

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்துவது இல்லை. தாய் மொழி கன்னடம் என்று தெரிந்தால் இண்டர்வியூக்களில் ரிஜெக்ட் செய்கிறார்கள் என்று சமீபத்தில் இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார்.

அதுமட்டுமின்றி பெங்களூரில் செயல்பட்டு வரும் eSthenos Technologies Pvt Ltd என்ற நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பில் தமிழ் அல்லது தெலுங்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என கூறியிருந்தது. இதனால் அந்த நிறுவனம் கன்னடர்களை புறக்கணிப்பதாக புகார்கள் கிளம்பின.

இதையடுத்து யுவ கர்நாடகா அமைப்பினர் அந்த நிறுவனத்துக்கு சென்று விளக்கம் கேட்டு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் இன்னும் பல ஐடி நிறுவனங்களை குறிவைத்து கன்னட அமைப்பினர் வார்னிங் கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது பெங்களூரில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் கன்னட அமைப்பினருக்கு கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் முக்கிய வார்னிங் வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''பெங்களூருவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்ப துறையில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், கன்னட மொழி பேசுபவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் வரும் புகார்களை அரசு தீவிரமாக கவனித்துள்ளது.

கன்னடர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கள் அரசுக்கு மிக முக்கியமானவை. நம் மாநில இளைஞர்களுக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு திட்டமிட்ட பாகுபாட்டையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இத்தகைய செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசு நேரடியாக கவனித்து, எழுப்பப்பட்டுள்ள கவலைகளைத் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

எனவே, எந்தவொரு அமைப்பும் நேரடியாக ஐடி மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு செல்ல வேண்டாம். சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் தீர்க்கப்பட வேண்டும். கன்னடர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+