ஹிஜாப் “ஓவர்”.. அடுத்து ஹலால் தடை! நெருங்கும் கர்நாடக தேர்தல் - புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக
பெங்களூரு: 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர கர்நாடக அரசு விதித்த தடையை தொடர்ந்து வன்முறை வெடித்த நிலையில் தற்போது இஸ்லாமியர்களின் மற்றுமொரு கடமையான ஹலாலுக்கும் தடை விதிக்க கர்நாடக பாஜக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.
கர்நாடகாவில் கடந்த மார்ச் மாதம் வெடித்த ஹிஜாப் பிரச்சனை, அதை தொடர்ந்து அரசின் தடை உத்தரவு, போராட்டங்கள், வன்முறையை தொடர்ந்து அம்மாநிலத்தில் இந்துத்துவ அமைப்புகள் ஹலால் இறைச்சி பிரச்சனையை கையில் எடுத்தனர்.
இஸ்லாமியர்கள் நடத்தி வரும் கறிக்கடைகளில் ஹலால் முறையில் விற்கப்படும் இறைச்சிகளை வாங்க வேண்டாம் என பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

பாஜக சட்டமேலவை உறுப்பினரின் மசோதா
இந்த நிலையில் கர்நாடகா மாநில பாஜக சட்ட மேலவை உறுப்பினர் ரவிக்குமார், FSSAI சான்றிதழ் தவிர்த்து ஹலால் போன்ற வேறு எந்த சான்றிதழுடனும் வரும் உணவு பொருட்களுக்கு தடை விதிக்க சட்டம் இயற்றக்கோரி தனிநபர் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

அரசே கொண்டு வர வேண்டும்
தற்போது இதனை அரசே தன்னுடைய மசோதாவாக ஏற்று தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கோரி இருக்கிறார். இதனை தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத்தில் ஹலால் தடை சட்டத்தை கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் பசரவாஜ் பொம்மையை சந்தித்து அவர் பாஜக எம்.எல்.சி. ரவிக்குமார் பேச இருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு சட்டமேலவை தலைவர் ஒப்புதல் வழங்கக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரிபிரசாத் வலியுறுத்தி உள்ளார். வாக்காளர் தகவல் திருட்டு, ஊழல் போன்றவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திருப்பி மதத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான பாஜகவின் திட்டம் இது என்று காங்கிரஸ் சட்டப்பேரவை துணைத் தலைவர் யுடி காதர் கூறி இருக்கிறார்.

முஸ்லிம் வியாபாரி மீது தாக்குதல்
கர்நாடகாவில் கடந்த மார்ச் மாதம் ஹலால் பிரச்சனை கிளம்பிய சமயத்தில், பத்ராவதி என்ற பகுதியில் ஹலால் இறைச்சிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பஜ்ரங்தள் அமைப்பினர், அங்கு கறிக்கடை நடத்தி வந்த இஸ்லாமிய வியாபாரி ஒருவரிடம் கடையை அடைக்க சொல்லி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவித்துண்டு அணிந்த பஜ்ரங்தள் அமைப்பினர் அவரை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

பசவராஜ் பொம்மை தகவல்
அதேபோல், ஷிவ்மோகா மாவட்டத்தில் உணவக உரிமையாளருக்கு பஜ்ரங்தள் அமைப்பினர் மிரட்டல் விடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக போலீசார் 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஹலால் இறைச்சிக்கு எதிர்ப்பு எழுந்து இருப்பது தொடர்பாக அரசு தீவிர ஆய்வு மேற்கொள்ளும் என்றார்.

மத்திய அரசின் விதி
இதனை தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்பு அமைப்பு அதிகாரிகளை சந்தித்த விலங்குகள் நல ஆர்வலர்கள், தமிழ்நாடு முழுவதும் இறைச்சிக் கடைகளில் விலங்குகள் வதை சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஆணையிடக் கோரி மனு வழங்கினர். மத்திய அரசு இது தொடர்பாக பிறப்பித்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என பெங்களூரு மாவட்ட அதிகாரிகளிடமும் வலியுறுத்தினர்.

கர்நாடக கால்நடைத்துறை உத்தரவு
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் கர்நாடக கால்நடைத் துறை ஒரு
உத்தரவை பிறப்பித்தது. அதில், பெங்களூரு மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதில், மத்திய அரசு கொண்டு வந்த சட்டப்படி இறைச்சிக் கூடங்கள் முறையாக கால்நடைகள் வதைக்கப்படாமல் வெட்டப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications