பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, மும்பை பாணியில், பெங்களூரில் புறநகர் ரயில் சேவை.. கர்நாடக பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஹெச்.டி.குமாரசாமி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில், பெங்களூர் நகர் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் பல இருந்தன.

Karnataka budget 2019: What Bengaluru gets from the budget?

அகுறித்த ஒரு பார்வை:

* தகவல் தொழில்நுட்ப கொள்கை மாற்றப்படும் (IT). இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் ஐடி நிறுவனங்கள் தொடங்க வாய்ப்பு ஏற்படும்

* பெங்களூர் நகரில், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவக்க 'இங்குபேஷன் மையம்' தொடங்கப்படும்.

* பெங்களூரிலுள்ள 5 லட்சம் மின் விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும்

* பெங்களூர் மேம்பால காரிடார் திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

* ரூ.23,093 கோடி செலவில் புற நகர் ரயில் சேவை பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும்.

* மல்டி மாடல் போக்குவரத்து ஹப், பெங்களூர் நகரின் ஹெப்பால், பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம், காடுகோடி, சல்லக்கட்டா மற்றும் பீன்யா ஆகிய பகுதிகளில் துவங்கப்படும்.

* இன்டர்-மாடல் ஒருங்கிணைந்த பெங்களூர் மெட்ரோ டிசைனுக்காக, தேவைப்படும், கட்டமைப்புகள், யஷ்வந்தபூர், பனசங்கரி, விஜயநகர், பீன்யா பகுதிகளில் ஏற்படுத்தப்படும்.

* பெங்களூரின் புகழ்பெற்ற பிரிகேட் ரோடு மற்றும் கமர்ஷியல் ஸ்ட்ரீட் ஆகியவை பாதசாரிகள் சாலைகளாக மாற்றப்படும்.

* 400 மெட்ரிக் டன் கொள்திறன் கொண்ட திடக் கழிவு சுத்திகரிப்பு பிரிவு அமைக்கப்படும்.

English summary
Karnataka budget proposes: Action to convert Commercial Street and Brigade Road into pedestrian roads. Establishing a 400 metric tonne capacity solid waste processing unit through KPCAL under PPP has been proposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X