சாவர்க்கர் படத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஈத்கா மைதான சர்ச்சை.. பரபரத்த கர்நாடகம்
பெங்களூர்: பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே இன்று கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது சாவர்க்கர் படத்துடன் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, படங்கள் வெளியாகி விவாதத்துக்கு உள்ளாகி உள்ளன.
சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி என பாஜக கூறி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் தற்போது சாவர்க்கர் யார்? என்பது தொடர்பான விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கோரிய நபர். வரலாற்றை பாஜக திரித்து கூறி அவரை கொண்டாட பாஜக முயற்சிக்கிறது என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

கர்நாடக பாடத்தில் சாவர்க்கர்
இதற்கிடையே தான் கர்நாடகத்தில் 8ம் வகுப்பு பாடத்தில் சாவர்க்கர் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் ஜன்னல் உள்பட சிறு துளை கூட இல்லாத அறையில் இருந்து புல்புல் பறவை மூலம் பறந்து வந்து நாட்டை பார்த்து சென்றதாக வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இது தற்போது விவாதமாகி உள்ளது. இது சாத்தியமே கிடையாது எனவும், மாணவர்களுக்கு உண்மைக்கு புறம்பான விஷயத்தை பாடமாக வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதோடு, இதனை நீக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பாஜக தரப்பில், இது ஒரு உவமைக்காக தான் எழுதப்பட்டுள்ளது. தாய்நாட்டு மீதான சாவர்க்கரின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவர்க்கர் படத்துடன் விழா
இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகள் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த விநாயகர் சிலைகளின் முன்பு சாவர்க்கரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பான பேனரில் சாவர்க்கரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சில இடங்களில் சாவர்க்கர் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பேனர் அகற்றியதால் சர்ச்சை
குறிப்பாக இன்று பெலகாவி, தார்வார், பெங்களூர் உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகளின் அருகே சாவர்க்கர் போட்டோ வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் மற்றும் துமகூருவில் சாவர்க்கர் படத்துடன் வைக்கப்பட்ட கட்அவுட்டுகள் அகற்றப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈத்கா மைதான சர்ச்சை
மேலும் பெரும் போராட்டத்துக்கு பிறகு தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இருப்பினும் பெங்களூர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இந்த ஆண்டு கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பரபரப்பான சூழலில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications