பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்.. தலைமையின் நேரடி கண்காணிப்பு.. வரப்போகும் அதிரடி மாற்றம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்து தொடர்பாக டெல்லி பாஜக தலைமையிடம் இருந்து தகவல் வந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மோடிக்கு மாற்று மோடிக்கு மாற்று

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு முடிவு கட்டப்பட்டது. தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

எடியூரப்பா

எடியூரப்பா

முன்னதாக, எடியூரப்பா பதவி விலகக்கோரி உள்கட்சியினரே அதுவும் சீனியர் எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சர்களே அவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். எடியூரப்பாவுக்கு எதிராக டெல்லி பாஜக தலைமையிடம் வரிசையாக புகார்கள் அனுப்பினார்கள். இதனால் எடியூரப்பா பதவி விலகுவார் என்று தகவல்கள் கசிந்த நிலையில் அதனை அவர் மறுத்தார்.

ராஜினாமா செய்தார்

ராஜினாமா செய்தார்

மேலும், பதவியை காப்பாற்றிக் கொள்ள டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் விவகாரத்தை எடுத்து கூறினார். ஆனாலும் அவர் பதவி விலக வேண்டும் என்பதில் பாஜக தலைமை தீவிரமாக இருந்தது. இந்த அழுத்தம் காரணமாக கடந்த 26-ம் தேதி கண்ணீர் மல்க தனது பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

அமைச்சரவை விரிவாக்கம்

அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடகா புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். புதிய அரசின் அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடைபெறும்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அமைச்சரவையில் யார் யார் இருக்க வேண்டும்? என்பது முழுக்க, முழுக்க டெல்லி பாஜகவின் கையில்தான் உள்ளது என்று கூறப்படுகிறது. உட்கட்சி பூசலை தடுப்பதற்காகவும், தங்களுக்கு முக்கியமான அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று சில சீனியர்கள் போர்க்கொடி துக்கியுள்ளதாலும் தலைமையே நேரடியாக இந்த விஷயத்தில் களமிறங்கி உள்ளது.

பசுவராஜ் பொம்மை கூறுவது என்ன?

பசுவராஜ் பொம்மை கூறுவது என்ன?

அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதால் டெல்லி பாஜக தலைமை அனுமதி அளித்த பிறகுதான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. டெல்லி தலைமையிடம் இருந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான உத்தரவு வருவதற்கு ஒரு வாரம் ஆகுமா? என்று நிருபர்கள் முதல்வர் பசுவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ''இன்று அல்லது நாளை உத்தரவு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்'' என்று தெரிவித்தார்.

English summary
Karnataka Chief Minister Basavaraj Bommai has said that the decision will be taken after receiving information from the BJP leadership regarding the expansion of the cabinet in Karnataka
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X