பார்த்ததுமே ஒரே பூரிப்பு! பதவியேற்பு விழாவில் ஸ்டாலினை ஆரத்தழுவி வரவேற்ற டிகே சிவக்குமார்-உற்சாகம்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினார். முன்னதாக ஸ்டாலினை, டிகே சிவக்குமார் வரவேற்று விழா மேடைக்கு அழைத்து சென்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் இன்று பதவியேற்றனர். அதேபோல் புதிதாக 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழா பெங்களூர் கன்டீரவா ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மத்திய பிரதேச மாஜி முதல்வர் கமல்நாத் உள்பட பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர்களின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், விழா மேடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த டிகே சிவக்குமார், ஸ்டாலினை பார்த்ததும் பூரித்தார். மேலும் ஸ்டாலினிடம் கைக்குலுக்கிய டிகே சிவக்குமார் ஆரத்தழுவி வரவேற்றார். ஸ்டாலினும் சிரித்தபடி வரவேற்பை ஏற்று கொண்டார்.
மேலும் ஸ்டாலின் உடன் டிஆர் பாலு எம்பியும் சென்றிருந்தார். அவரையும் கைக்கலுக்கி டிகே சிவக்குமார் வரவேற்றார். மேலும் இந்த விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார். இதுதவிர பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

அதோடு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான ராஜா ஆகியோரும் விழாவில் பங்கேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications