Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு முழுஆதரவு.. பிரதமர் மோடி சொன்ன அந்த வார்த்தை.. கவனிச்சீங்களா! விபரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த படத்துக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தின் புதிய முகத்தை ‛தி கேரளா ஸ்டோரி' வெளிப்படுத்துவதாக கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கேரளாவை மையப்படுத்தி ‛தி கேரளா ஸ்டோரி' எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதோடு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு சதித்திட்டங்கள் தீட்டுவது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருந்தது தான் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாகும்.

இதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி அவர், கேரளா மதசார்பின்மை கொண்ட அமைதியான மாநிலம். இந்த மாநிலம் குறித்து தவறான கண்ணோட்டத்தில் போலியாக திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சங்பரிவார்கள் உள்ளன என கூறியிருந்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் கேரளா மாநில உயர்நீதிமன்றத்திலும் படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் தான் சில காட்களில் மாற்றம் செய்யப்பட்டு இன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இன்று கர்நாடகா மாநிலம் பல்லாரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதை கவனித்தால் உங்களுக்கே நன்றாக புரியும். அதாவது ‛தி கேரளா ஸ்டோரி' பற்றி பிரதமர் மோடி, ‛‛அழகிய கேரளா மாநிலத்தில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்ட ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முயற்சிக்கிறது.
தீவிரவாதம் தற்போது புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சமூகத்தை உள்ளிருந்து பிரித்தாள்வதற்கான வேலையை செய்கிறது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது'' என கூறினார்.

இதன்மூலம் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் என்பது இந்தியாவில் தீவிரவாதம் நுழைவதற்கான புதிய பரிணாமத்தை காட்டுவதாக கூறியுள்ளார். இதன்மூலம் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை கோரிய காங்கிரஸ் கட்சியையும் பிரதமர் மோடி பிரசாரத்தில் தாக்கி பேசினார்.

Karnataka Election: Prime Minister Narendra Modi supports to ‛The Kerala Story’ Movie and criticized congress

இதுபற்றி பிரதமர் மோடி, ‛‛தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கேரளாவில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த திரைப்படத்தை தடை செய்து தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாத அமைப்புகள் முன்பு மண்டியிட்டு இருந்தது. இதனால் நீண்டகாலமாக வன்முறையால் பாதித்தோம். மேலும் தீவிரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காங்கிரஸ் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. இத்தகைய சூழலில் கர்நாடகத்தை காங்கிரஸால் பாதுகாக்க முடியுமா?'' என ‛தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வாயிலாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி இயக்குனர் விவேக் அக்னி கோத்ரியின் ‛தி காஷ்மீர் பைல்ஸ்' எனும் திரைப்படத்தை பாராட்டி இருந்தார். கடந்த ஆண்டு மார்ச் 11ல் வெளியான ‛தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படம் 1990ல் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டித்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் விவாத பொருளாகி உள்ளது. இப்படத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினர் ஆதரவு தெரிவித்தர். பிரதமர் மோடி படக்குழுவை அழைத்து பாராட்டினார். மேலும் பாஜக ஆளும் பல மாநிலங்களில் அந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டன.

இந்நிலையில் தான் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் ‛தி கேரளா ஸ்டோரி' எனும் திரைப்படத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த படத்தை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+