கர்நாடகா முதல்வர் பதவி.. சித்தராமையா, டிகேசி, குமாரசாமி 2 தொகுதியில் போட்டி?பின்னணி பாஜக ஸ்கெட்ச்!
கர்நாடகா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா, டிகேசிவக்குமார், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமி ஆகியோர் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் இன்னும் 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பம்பரமாக சுற்றி தேர்தல் பணியை துவங்கி உள்ளனர். வேட்பாளர் தேர்வு செய்யும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் கனவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எதிர்கட்சி தலைவரான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் குமாரசாமி ஆகியோர் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரையும் வீழ்த்த பாஜக தீவிரமாக ஸ்கெட்ச் போட்டு வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த 4 கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி உற்சாகம்
தற்போதைய நிலவரப்படி வந்த சர்வேக்களில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது. தற்போதைய பாஜக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என சர்வே முடிவுகள் சொல்கின்றன. இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கிடைப்பது சந்தேகம் தான். ஆனாலும் 100க்கும் அதிக இடங்களில் வென்று மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் மாறும். மாறாக பாஜக 70 முதல் 80 இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இதனால் 40 இடங்களில் ஜனதாதளம் (எஸ்) வெற்றி பெற்றால் அது கிங் மேக்கராக மாறும். இந்த சர்வே முடிவுகள் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளன.

முதல்வர் கனவு வேட்பாளர்கள்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவியை பெற தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகேசிவக்குமார் ஆகியோர் ஆர்வமாக உள்ளனர். ஜனதாதளம்(எஸ்) சார்பில் குமாரசாமி முதல்வர் பதவி மீது குறிவைத்துள்ளனர். இதனால் பாஜக இழந்த செல்வாக்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு முதல்வர் கனவில் உள்ள எதிர்க்கட்சியினரை வீழ்த்த பாஜக சிறப்பு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் தல்வர் கனவில் உள்ள தலைவர்கள் 2 தொகுதிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போதே அவர்களின் தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்க தொடங்கி உள்ளனர்.

காரணம் என்ன?
2 தொகுதிகளில் போட்டியிட தொண்டர்கள் விருப்பம் என பொதுவாக தலைவர்கள் கூறினாலும் கூட அதன் பின்னணியில் வேறு அரசியல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது முதல்வர் கனவில் உள்ளவர்களை வீழ்த்த பாஜக போடும் பிளான் மற்றும் ஜாதிவாரியாக கட்சிக்கு அதிக ஓட்டுக்களை பெற்று கூடுதல் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து சக்திமிக்க தலைவர் என நிரூபிக்கும் முனைப்பில் தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிடலாம் என சொல்லப்பபடுகிறது. இந்நிலையில் தான் எந்தெந்த தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது எனவும், அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது

சித்தராமையா
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக சித்தராமயைா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2013 முதல் 2018 ஆண்டு வரை முதல்வராக இருந்தார். கடந்த 2018 தேர்தலில் மைசூரு சாமுண்டேஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட்டார். இதில் பாதாமியில் வெற்றி பெற்ற அவர் தற்போது கோலார் தொகுதியில் இருந்து களமிறங்குவதாக அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் சித்தராமையா உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இன்னொரு தொகுதியிலும் போட்டியிட வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி சித்தராமையாவின் சொந்த கிராமம் உள்ள மைசூரு மாவட்டம் வருணாவில் போட்டியிட அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது வருணா எம்எல்ஏவாக சித்தராமையாவின் மகன் யதீந்திரா இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சித்தராமையா ஒரு தொகுதியில் இருந்து தான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

டிகே சிவக்குமார்
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதி எம்எல்ஏவாகவும் இருப்பவர் டிகே சிவக்குமார். காங்கிரஸ் கட்சியின் முதல்வர் பதவிக்கான ரேஸில் இவரும் உள்ளார். இவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.இந்த ஒக்கலிகர் சமுதாய மக்கள் மைசூர், ஹாசன், மண்டியா, ராமநகர், பெங்களூர் புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக வசித்து வருகின்றனர். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேவேகவுடா இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான். இவரது கட்சிக்கு தான் ஒக்கலிகர் சமுதாயத்தினரின் ஆதரவு அதிகம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தான் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் தன்னை ஒக்கலிகர் சமுதாய தலைவராக முன்நிறுத்தும் முனைப்பபில் உள்ளார். இவர் கனகப்புரா தொகுதியில் போட்டியிட்டு பிரசாரம் செய்யாமல் இருந்தால் கூட 100 சதவீதம் வெற்றி பெறுவார் என்ற நிலையில் தான் ஒக்கலிகர் சமுதாய மக்களின் வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கிடைக்கும் வகையில் மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என டிகேசிவக்குமாரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மத்தூர் தொகுதி என்பது மைசூர், பெங்களூர் ஆகியவற்று மத்தியில் மண்டியா மாவட்டத்தில் உள்ளது. இங்கு டிகே சிவக்குமார் போட்டியிடுவதன் மூலம் மைசூர், மண்டியா மாவட்டத்தில் உள்ள ஒக்கலிகர் சமுதாயத்தின் ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கிடைக்கும் என ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் டிகே சிவக்குமார் மத்தூர், கனகப்புரா தொகுதியில் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் கனகபுரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து அடுத்தக்கட்ட தலைமுறையை அரசியலில் கால்பதிக்க டிகே சிவக்குமாரின் ஆதரவாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

குமாரசாமி
இதேபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிடுகிறார். இவரையும் மண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மண்டியா மாவட்டத்தில் குமாரசாமி சார்ந்த ஒக்கலிகர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்திகளாக இவர்கள் உள்ளனர். இருப்பினும் கூட கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் ஒக்கலிகர் வாக்கு வங்கி பிற கட்சிக்கு செல்வதாக ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனை தடுக்க குமாரசாமி மண்டியா தொகுதியில் களமிறங்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சமுதாய வாக்குகளையும் ஜனதாதளம்(எஸ்) கட்சி அறுவடை செய்ய முடியும் என குமாரசாமியின் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இருப்பினும் கூட இந்த விஷயத்தில் குமாரசாமி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

பரமேஸ்வர்- ஸ்ரீராமுலு
இதேபோல் பிற முக்கிய தலைவர்கள் தொகுதி மாறி போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி முன்னாள் துணை முதல்வரும், மாஜி காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வர் தற்போது துமகூரு மாவட்டம் கொரட்டகெரே எம்எல்ஏவாக உள்ளார். இவர் பெங்களூர் புறநகர் அல்லது பெங்களூர் புலிகேசிநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜகவின் தற்போதைய அமைச்சராக ஸ்ரீராமுலு சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தொகுதி எம்எல்ஏவா உள்ளார். இவர் தனது சொந்த தொகுதியான பல்லாரி புறநகர் அல்லது பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications