கர்நாடகா ஆளுநர் மீது 'கொலைவெறியில்' சித்தராமையா ஆதரவாளர்கள்- நிகழ்ச்சிகள் ரத்து- இசட் பாதுகாப்பு!
பெங்களூர்: மூடா வீட்டு மனைகள் முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்த விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களால் ஆளுநர் கெலாட் தாக்கப்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாகவும் இதனால் ஆளுநரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்தான் மூடா என்பது. இந்த மூடா ஆணையமானது. முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த மனைகள் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என பாஜக மற்றும் சமூக ஆர்வர்லர்கள் ஆளுநர் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். மேலும் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் ஆளுநர் அனுமதி கொடுத்தார்.

இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துகின்றன. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுத்த ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டங்களை நடத்துகிறது.
இந்த நிலையில் கர்நாடகா உள்துறை செயலாளர் உமாசங்கருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ஆளுநர் கெலாட் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்க வேண்டும்; இசட் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 29-ந் தேதி வரை ஆளுநரின் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும். இதனை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆளுநரின் அனைத்து பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆளுநர் கெலாட்டுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் விதானசவுதா அருகே ஆளுநர் மாளிகையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications