சித்தராமையாவுக்கு எதிராக சதி- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கர்நாடகாவை அதிரவைத்துக் கொண்டிருக்கும் வால்மீகி வாரிய நிதி முறைகேட்டுக்கு முதல்வர் சித்தராமையாதான் காரணம் என ஒப்புதல் வாக்குமூலம் தர அதிகாரிகளுக்கு நெருக்கடியும் மிரட்டலும் விடுத்ததால் மித்தல், முரளி கண்ணன் ஆகிய இரு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் வால்மீகி வாரிய அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக சந்திரசேகர் எழுதிய கடிதத்தில் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளை விவரித்திருந்தார்.

இதனால் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும் வால்மீகி வாரியத்தில் பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய போது, முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில்தான் வால்மீகி வாரிய முன்னாள் அதிகாரியும் தற்போது கர்நாடகா சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகவும் இருக்கும் கல்லேஷ், ஷேசாத்திரிபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். பின்னர் அந்தப் புகார் வில்சன் கார்டனுக்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு தடை கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications