பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கொடியை இறக்கிவிட்டு.. இந்துத்துவ மாணவர்கள் காவி கொடி ஏற்றினார்களா? புட்டு புட்டு வைத்த எஸ்பி

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் தேசிய கொடியை அகற்றிவிட்டு இந்துத்துவா மாணவர்கள் காவி கொடி ஏற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவிற்கு ஷிவமொக்கா எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    தேசிய கொடியை இறக்கிவிட்டு.. இந்துத்துவ மாணவர்கள் காவி கொடி ஏற்றினார்களா? புட்டு புட்டு வைத்த எஸ்பி

    கர்நாடகாவில் இருக்கும் பெரும்பாலான பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்று அம்மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இந்த புதிய கட்டுப்பாடு கல்லூரிகளில் விதிக்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

    முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் - வைரமுத்து வாழ்த்து முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதல்வர் - வைரமுத்து வாழ்த்து

    போராட்டம்

    போராட்டம்

    இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக நேற்று சிவமொக்காவில் உள்ள பியு கல்லூரியில் கடுமையான போராட்டம் நடைபெற்றது. இந்துத்துவா மாணவர்கள் பலர் கூடி இங்கு தீவிர போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் போது இந்துத்துவா மாணவர்கள் பலர் கற்களை வீசி இஸ்லாமிய மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாணவர்கள் இடையிலான கலவரத்தின் போது போலீசார் லத்தி தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

    இந்துத்துவா மாணவர்கள்

    இந்துத்துவா மாணவர்கள்

    இந்த கலவரம் மற்றும் மோதலின் போது அங்கு இருந்த இந்துத்துவா மாணவர்கள் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் காவி கொடியை ஏற்றியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய கொடியை அகற்றிவிட்டு இந்துத்துவா மாணவர்கள் காவி கொடி ஏற்றியதாக முதலில் புகார் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் இது தொடர்பாக செய்த ட்விட்டில், கர்நாடக கல்வி நிறுவனங்களில் நிலைமை கையை மீறி சென்று கொண்டு இருக்கிறது.

    கண்டனம்

    கண்டனம்

    ஒரு இடத்தில் சிலர் தேசிய கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை ஏற்றி உள்ளனர். இதனால் கல்வி நிறுவனங்களை குறைந்தது ஒரு வாரம் மூடி சட்ட ஒழுங்கை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று சிவக்குமார் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அந்த கல்லூரியில் தேசிய கொடியை இந்துத்துவா மாணவர்கள் அகற்றவில்லை என்று ஷிவமொக்கா எஸ்பி குறிப்பிட்டுள்ளார்.

    விளக்கம்

    விளக்கம்

    அவர் அளித்த பேட்டியில், தேசிய கொடியை கம்பத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தேசிய கொடியை நீக்கிவிட்டு அதில் காவி கொடியை ஏற்றியதாக செய்திகள் வருகின்றன. ஆனால் அங்கு தேசிய கொடி அகற்றப்படவில்லை. அந்த கம்பத்தில் அப்போது கொடி எதுவும் இல்லை. வெறும் கம்பத்தில்தான் காவி கொடியை ஏற்றி உள்ளனர். அதையும் அவர்கள் செல்லும் போது அகற்றிவிட்டு சென்றனர் என்று எஸ்பி லட்சுமி பிரசாத் பேட்டி அளித்துள்ளார்.

    காவி கொடி

    காவி கொடி

    இந்த நிலையில் அந்த கொடி கம்பம் நேற்று போராட்டத்திற்கு பின் காவி கொடியும் அகற்றப்பட்டு வெறுமனே நின்றது. இதையயடுத்து அந்த கொடி கம்பத்தில் போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்கள் வந்து தேசிய கொடியை ஏற்றினார்கள். அங்கு தேசிய கொடியை ஏற்றியவர்கள் காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் உத்தரவை அடுத்து அங்கு தேசிய கொடியை மாணவர்கள் இயற்றியதாக கூறப்படுகிறது.

    English summary
    Karnataka Hijab Row: Did Hindutva students replace the national flag with a saffron flag? What is the truth? Clarifies SP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X