இந்தி தினம் துக்க நாள்.. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் ஆவேசப் போராட்டம்!
பெங்களூர்: இந்தி மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று போராட்டங்களையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி மொழியானது மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக 75 ஆண்டுகளைக் குறிக்கும் விழாவில் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு, நாம் ஒரு உறுதிமொழி ஏற்பாட்டை மேற்கொள்வோம், இந்தி மற்றும் நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்துவோம், அலுவல் மொழித் துறையின் இந்தப் பணிக்கு ஆதரவளிப்போம் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஆனால் இந்தி தினத்துக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்தும் கர்நாடகாவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தி தினம் என்பது கறுப்பு தினம்; இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சியால் கன்னட மொழி பாதிக்கும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் கர்நாடகாவில் இரு மொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இந்தியில் வர்த்தக நிறுவனங்கள் எழுதி வைத்திருந்த பெயர் பலகைகளையும் கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் தார்பூசி அழித்தனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications