57 இடத்தில் ரெய்டு.. கட்டுக்கட்டாக சிக்கிய பணம்-தங்க நகைகள்.. லோக் ஆயுக்தா சோதனையால் பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் பெங்களூர் உள்பட 11 மாவட்டங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 57 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கெடிகாரங்கள் சிக்கின.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் முதல் முதலாக நேற்று மாநிலம் முழுவதும் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அரசு அதிகாரிகளாக பணியாற்றி கொண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் குறித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூர், பெங்களூர் புறநகர், மண்டியா, மைசூர், சிவமொக்கா, தட்சின கன்னடா, ஹாவேரி, சாம்ராஜ்நகர், உடுப்பி, துமகூரு, கொப்பல் ஆகிய 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 15 அரசு அதிகாரிகளை குறிவைத்து லோக்ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.

பெங்களூர் பசவேஸ்வரா நகரில் உள்ள பெஸ்காம் மின்வாரி அதிகாரி ரமேஷ், பெங்களூரு விஜயநகரில் உள்ள தொழிலாளர் துறை துணை இயக்குனர் நாராயணப்பா, ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் கட்டுமான மைய என்ஜினீயர் வகீஷ் ஷெட்டர், துமகூருவில் அரசு அதிகாரி நரசிம்ம மூர்த்தி, கொப்பலில் அரசு அதிகாரி சின்சோலிகர், மைசூருவில் அரசு அதிகாரி மகேஷ் குமார் உள்பட 15 பேரின் வீடு, அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின்போது லோக்ஆயுக்தா போலீசார் அரசு அதிகாரிகளின் வீடுகளில் உள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்களை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டில் உள்ள தங்கநகை, வெள்ளி பொருட்கள் உள்பட விலையுயர்ந்த பொருட்களின் மதிப்புகளை கணக்கீடு செய்தனர். அப்போது சில அதிகாரிகள் கணக்கில் காட்டாத வகையில் ரொக்கப்பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
இத்தகைய பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை சிக்கின. பெங்களூர் பெஸ்காம் அதிகாரி ரமேஷ் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள், ரூ.1½ கோடி மதிப்பிலான ரொக்கம் சிக்கியது. ஹாவேரில் உள்ள வகீஸ் செட்டர் வீட்டில் கணக்கில் வராத ரூ.4¾ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் பிற அதிகாரிகளின் வீடுகளில் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் சிக்கின. மேலும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோல் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் மொத்தம் 57 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களை லோக் அயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications