சன்னி லியோன் ரசிக நண்பர்களே! மொபைலில் 10 போட்டோ இருந்தால் போதும்.. அதிரடி ஆஃபர் உங்களுக்குத்தான்!
பெங்களூரு : கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடை நடத்தும் நபர் ஒருவர், நடிகை சன்னி லியோனின் ரசிகர்களுக்கு வாங்கும் இறைச்சியின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்திய பூர்வீகத்தை சேர்ந்த சன்னி லியோன் சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட நிலையில், மாடலிங் துறையில் கால்பதித்து பின்னர் ஆபாச படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
இதன் காரணமாக அவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உருவாகிய நிலையில், ஆபாச படங்களிலும் நடிப்பதை நிறுத்திய சன்னி லியோன் இந்தியாவுக்கு குடிபுகுந்ததோடு, பாலிவுட் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

நடிகை சன்னி லியோன்
லைலா மே லைலா, மதுபான் மே ராதிகா நாச்சே உள்ளிட்ட பாடல்களில் கவர்ச்சி நடனமாடி பல ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த அவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 50 ஒரு மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

ரசிகரின் அதிரடி
சன்னி லியோன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி அவரை உற்சாகமாக வரவேற்கும் அளவிற்கு அவர் மீது கிரேஸ் உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சிக் கடை நடத்தும் நபர் ஒருவர், நடிகை சன்னி லியோனின் ரசிகர்களுக்கு வாங்கும் இறைச்சியின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த இறைச்சி விற்பனையாளர் பிரசாத் கேஎன், நடிகையின் தொண்டுப் பணிகளால் ஈர்க்கப்பட்டு தள்ளுபடியை வழங்குவதாகக் கூறினார். பிரசாத் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்டத்தில் டிகே சிக்கன் என்ற பெயரில் கடையை நடத்தி வருகிறார்.

10 சதவீதம் தள்ளுபடி
சன்னி லியோனின் பெயரை தனது வணிகத்தை விளம்பரப்படுத்த பயன்படுத்துகிறீர்களா என்று கேட்டதற்கு, "அவரது ரசிகர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி தருகிறேன். அவரது ரசிகர் பட்டாளம் அதிகரித்தால், அவர் மேலும் தொண்டு செய்ய முடியும். "சன்னி லியோன் ஆபாசத் தொழிலுடன் கடந்தகால தொடர்பு காரணமாக பாலியல் அடையாளமாக பார்க்கப்படுகிறார். என் நண்பர்கள் பலர் அவரைப் பற்றி பேசுவதை அடிக்கடி கேட்டிருக்கிறேன். பின்னர் சன்னி லியோனின் வாழ்க்கையைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன், அவர் சமூகத்திற்கு நிறைய செய்திருக்கிறார் என்பதைக் கண்டேன்.

சன்னியின் நல்ல மனது
ஒரு பெண்ணைத் தத்தெடுப்பதில் இருந்து பள்ளி நடத்துவது வரை, மேலும் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது உதவிகளைச் செய்தல் என அவர் உண்மையிலேயே ஒரு முன்மாதிரி. எனவே, அவரது ரசிகர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்தேன் என்கிறார் கடையை நடத்தும் பிரசாந்த். நீங்கள் சன்னி லியோனின் ரசிகராக இருந்தாலும், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சன்னி லியோனைப் பின்தொடர்ந்தால் மட்டுமே தள்ளுபடியைப் பெற முடியும். சன்னி லியோன் நடித்த படத்திற்கும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்" என்று பிரசாத் கூறினார்.

கடையில் கூடுதல் வியாபாரம்
சன்னி லியோனின் ரசிகர்களுக்கான சிறப்புச் சலுகையைத் தொடங்கிய பிறகு ஊக்கம் மற்றும் கிண்டல் இரண்டையும் பெற்றதாக கூறும் அவர். "எனது கடையின் புகைப்படம் வைரலான பிறகு எனக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார். ஹலால் மற்றும் ஜட்கா இறைச்சி தொடர்பான சமீபகால சர்ச்சை குறித்து கேட்டதற்கு, "எங்களுக்கு இப்பகுதியில் முஸ்லிம் வாடிக்கையாளர்கள் இல்லை. எனவே, நான் ஜாட்கா இறைச்சியை விற்கிறேன். இந்த சர்ச்சைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications