கர்நாடகா தேர்தல்: புதுகட்சி துவங்கிய ஜனார்த்தன ரெட்டி.. பாஜகவுக்கு சிக்கல்..சுஷ்மாவின் சிஷ்யன் செக்
பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி ‛கல்யான ராஜ்ய பிரகதி பக்சா' என்ற பெயரில் புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் மூத்த தலைவராக இருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் மூலம் பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக எழுச்சி பெற்ற இந்த ஜனார்த்தன ரெட்டி கனிம சுரங்க ஊழலில் சிறை சென்று ஜாமினில் திரும்பிய நிலையில் பாஜக அவரை கண்டுகொள்ளாததால் புதிய கட்சியை துவங்கி தலைவலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2008 சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எடியூரப்பா முதல் அமைச்சராக இருந்தார். இந்த வேளையில் எடியூரப்பாவின் அமைச்சரைவில் இடம் பெற்றவர் தான் ஜனார்த்தன ரெட்டி.
இவர் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக செயல்பட்டார். ஜனார்த்த ரெட்டி பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர். மேலும் அவர் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்தார்.

செல்வாக்கு மிக்க தலைவர்
இவர் கனிம சுரங்க தொழில் செய்து வருகிறார். பல்லாரி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சுரங்கங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே தான் ஜனார்த்தன ரெட்டி மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக மாறினார். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கோடிக்கணக்கில் அவரிடம் பணம் கொழிக்க துவங்கியது. இதற்கிடையே தான் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதாவது சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜனார்த்தன ரெட்டி மீது புகார்கள் எழுந்தன.

ஊழல் வழக்கில் சிறை
இதுபற்றி விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீனில் விடுதலையானார். 2015ல் சிறையில் இருந்து வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஜனார்த்தன ரெட்டி சொந்த மாவட்டமான பல்லாரிக்கு மட்டும் செல்ல முடியாத சூழல் உள்ளது. இதற்கிடையே அவர் கைது செய்யப்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அரசியலில் உச்சியில் இருந்த ஜனார்த்தன ரெட்டி திடீரென்று செல்வாக்கை இழந்து காணப்பட்டார். மேலும் தன்னை அரசியலில் மீட்டெடுக்க அவர் நினைத்தார். பணமதிப்பிழப்பு காலத்தில் தனது மகளுக்கு சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் திருமணம் செய்து வைத்து அசரடித்தார்.

அரசியலில் மறுபிரவேசம்
அதன்பிறகும் கூட ஜனார்த்தன ரெட்டி எடியூரப்பாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். எப்படியாவது அரசியலில் மீண்டும் தீவிரம் காட்ட வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவே இல்லை. இதனால் ஜனார்த்தன ரெட்டி பொறுமையிழந்தார். மேலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக கட்சி துவங்கிய பல்லாரி மற்றும் அதனை சுற்றி குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி தனது பலத்தை நிரூபிக்க அவர் முயற்சி செய்வதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

புது கட்சி அறிவிப்பு
இந்நிலையில் தான் தற்போது ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை துவக்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டுள்ளார். இதுபற்றி ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‛‛‛கல்யான ராஜ்ய பிரகதி பக்சா எனும் கட்சியை துவங்க உள்ளேன். வரும் தேர்தலில் நான் கொப்பல் மாவட்டம் கங்காவதி சட்டசபை தொகுதியில் போட்டியிட உள்ளேன். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்க உள்ளேன். எனக்கும், பாஜக தலைவர்களும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. எனது நண்பர் ஸ்ரீராமுலு பாஜகவில் அமைச்சராக உள்ளார். நான் புதிய கட்சி தொடங்கினாலும் எங்கள் இருவரின் நட்பும் பாதிக்காது. ஏனென்றால் நாங்கள் சிறுவயது முதலே நண்பராக இருக்கிறோம்'' என்றார். இது கர்நாடகா பாஜக தலைவர்களுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது.

பாஜகவுக்கு பிரச்சனை எப்படி?
ஏனென்றால் ஜனார்த்த ரெட்டி பணபலம் மிக்கவர் என்பதோடு, பல்லாரி, கொப்பல் உள்பட அதனை சுற்றிய 4 மாவட்டங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். இவர் சிறைக்கு சென்று வந்தாலும் கூட அந்த பகுதியில் ஜனார்த்தன ரெட்டியின் செல்வாக்கு என்பது இன்னும் அப்படியே உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பாஜக 2023 தேர்தலில் பின்னடைவை சந்தித்தால் அது மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் தான் ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சி அறிவிப்பு பாஜகவுக்கு பிரச்சனையை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு ஸ்ரீராமுலு பிஆர்எஸ் எனும் கட்சியை துவங்கிய 4 இடங்களில் வெற்றி பெற்றார். மேலும் பல இடங்களில் பாஜகவின் ஓட்டுக்களை பிரித்து பிரச்சனையை ஏற்படுத்தினார். தற்போது அவர் பாஜகவில் கட்சியை இணைத்து கொண்டாலும் ஜனார்த்தன ரெட்டியால் 2023 சட்டசபை தேர்தலின் பாஜகவின் வெற்றிக்கு பிரச்சனை வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சுஷ்மா சுவராஜின் சிஷ்யன்
புதிய கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள ஜனார்த்தன ரெட்டி பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த தலைவருமான சுஷ்மா சுவராஜின் சீசியனாக இருந்தார். அதாவது கடந்த 1999 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கர்நாடகாவின் பல்லாரி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அவரை எதிர்த்து சுஷ்மா சுவாராஜ் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டார். இந்த தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்றாலும் கூட, ஜனார்த்தன ரெட்டி சுஷ்மா சுவராஜின் அன்பை பெற்றார். அதன்பிறகு சுரங்கம் தொடர்பான முறைகேட்டில் ஜனார்த்தன ரெட்டி அவரது ஈடுபட்டதை அறிந்த சுஷ்மா சுவராஜ் அவரிடம் இருந்து விலகினார். சுஷ்மா சுவராஜ் பல்லாரியில் களமிறங்குவதற்கு முன்பே ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இருந்தாலும் கூட அறியப்படும் தலைவராவாக இல்லை. சுஷ்மா சுவராஜ் வந்த பிறகே பாஜகவில் ஜனார்த்தன ரெட்டியின் செல்வாக்கை உயர்த்தி கொண்டார்.

4 பேர் கைகோர்த்தால் கூடுதல் சிக்கல்
இந்த வேளையில் ஜனார்த்தன ரெட்டியுடன் சேர்ந்து பாஜகவில் செல்வாக்கை உயர்த்தி கொண்டவர் தான் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு. தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். ஜனார்த்தன ரெட்டியும், ஸ்ரீராமுலுவும் தான் சுஷ்மா சுவராஜ் வெற்றிக்காக பல்லாரியில் உழைத்தனர். ஸ்ரீராமுலு சுகாதாரத்துறையை நிர்வகித்து வந்த நிலையில் அது சமீபத்தில் பறிக்கப்பட்டு போக்குவரத்து துறை வழங்கப்பட்டது. இதனால் அவரும் அதிருப்தியில் உள்ளார். இதேபோல் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான கருணாகர ரெட்டி பல்லாரி மாவட்டம் ஹரப்பன ஹள்ளி சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இன்னொரு சகோதரரான சோமசேகர ரெட்டி பல்லாரி சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இவர்கள் 3 பேரும் ஜனார்த்தன ரெட்டியுடன் சேரும் பட்சத்தில் பாஜகவுக்கு பல்லாரி உள்பட 4 முதல் 5 மாவட்டங்களில் பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications