தேசிய கொடிலாம் ஏற்ற முடியாது.. நான் ரொம்ப பிஸி.. சுதந்திர தின விழாவை புறக்கணித்த கர்நாடகா அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எனக்கு பெங்களூரில் நிறைய வேலை இருக்கிறது. இதனால் சுதந்திர தினவிழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்ற முடியாது. சுதந்திர தின விழாவில் பங்கேற்கவும் முடியாது என்று கர்நாடகா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கடிதம் எழுதிவிட்டு விழாவை புறக்கணித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

karnataka-minister-zameer-ahmed-khan-skips-independece-day-flag-hoisting-duty

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். இவரது அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருப்பவர் ஜமீர் அகமது கான். இவர் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.

தற்போது ஜமீர் அகமது கான் விஜயநகர் எனும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ளார். இன்று நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முதல்வர்கள், அமைச்சர்கள் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்

பெங்களூரில் நடந்த விழாவில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல் அங்குள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றினர். அந்த வகையில் விஜயநகர் எனும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஜமீர் அகமது கான் இன்று கொடியேற்றவில்லை. அவருக்கு பதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பசவந்தப்பா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

ஜமீர் அகமது கான் தேசியக்கொடியை ஏற்றுவது மற்றும் சுதந்திர தினவிழாவை புறக்கணித்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிஉள்ளது. விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே தான் தன்னால் சுதந்திர தின விழாவில் பங்கேற்க முடியாது என்று ஜமீர் அகமது கான் முன்கூட்டியே அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி விழாவில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஜமீர் அகமது கான் எழுதிய கடிதத்தில் தனக்கு எனக்கு எந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவியையும் வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணத்தையும் ஜமீர் அகமது கான் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

அதில், ''நான் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறேன். விரைவில் பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வர உள்ளது. இதனால் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இதனால் மாவட்ட பொறுப்பு அமைச்சராக எனது கடமையை நிறைவேற்ற போதிய நேரம் இருக்காது. இதனால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி வேண்டாம்.

விஜயநகர் பொறுப்பு அமைச்சராக எனக்கு அங்கு தேசியக்கொடி ஏற்றும் பொறுப்பை வழங்கி உள்ளீர்கள். அந்த விழாவிலும் என்னால் பங்கேற்க முடியாது. இதனால் விஜயநகர் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் இருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்று முன்கூட்டியே எழுதிய கடிதத்தில் கூறியுள்ளாராம்.

இதற்கு முதல்வர் டிகே சிவக்குமாரும் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தான் ஜமீர் அகமது கானுக்கு பதில் அமைச்சர் பசவந்தப்பாவிடம் விஜயநகரில் தேசியக்கொடி ஏற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ஜமீர் அகமது கான் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சுதந்திர தினவிழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றாதது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜமீர் அகமது கானை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுபற்றி பாஜகவின் எம்எல்ஏ சுனில் குமார் கூறுகையில், ''அமைச்சராக இருந்து கொண்டு ஒருவர் சுதந்திர தினவிழாவில் கொடியேற்ற மறுத்தால் அப்படியான அமைச்சர் எதற்கு வேண்டும்? சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றுவதை விட அவருக்கு வேறு என்ன பெரிய வேலை இருக்கிறது? அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என கூறினார்.

இந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சைக்கு நடுவே ஜமீர் அகமது கான் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+