எங்களால்தான் 72 தொகுதி ஜெயிச்சீங்க.. ஒரு துணை முதல்வர் பதவி, 5 முக்கிய துறைகள்..முஸ்லிம்கள் டிமாண்ட்
பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் அரசில் முஸ்லிம்கள் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி, 5 முஸ்லிம் எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வக்ஃப் வாரியத் தலைவர் ஷாஃபி ஷாதி வலியுறுத்தி உள்ளார். முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் 72 இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்பதால் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஷாஃபி ஷாதி கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135; பாஜக 66; மஜத 19 இடங்களில் வென்றது. கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களைத் தாண்டி அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா, டிகே சிவகுமார் உள்ளனர். இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் பதவியை தங்களது தலைவர்களுக்கு தரவேண்டும் என்பதை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டுவது, முழக்கங்களை எழுப்புவது என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கர்நாடகா புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்பட்டது. காங்கிரஸ் மேலிடமும் 3 மேலிடப் பார்வையாளர்களை அனுப்பி வைத்தது. ஆனால் டெல்லி மேலிடமே புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கட்டும் என ஒற்றை வரி தீர்மானம் மட்டும் நேற்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கர்நாடகாவில் புதிய முதல்வர் யார் என்கிற புதிர் நீடித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே கர்நாடகா காங்கிரஸ் அரசில் துணை முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக வக்ஃப் வாரியத் தலைவர் ஷாஃபி ஷாதி கூறுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற முஸ்லிம் வாக்குகள் முழு காரணம். மொத்தம் 72 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம். ஆகையால் முஸ்லிம்களுக்கு ஒரு துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும். அத்துடன் 5 முக்கிய துறைகளை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் மஜதவின் வாக்குகளில் 5% காங்கிரஸ் கைப்பற்றியதால் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அத்துடன் மஜதவிடம் இருந்த முஸ்லிம் வாக்குகள் இம்முறை முழுமையாக காங்கிரஸ் பக்கம் திரும்பியது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு 9 முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். மஜத கட்சிக்கு ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ. கூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் மீது முஸ்லிம்கள் பெரும் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். ஆகையால் துணை முதல்வர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு கிடைக்கும் என்றே கர்நாடகா அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications