கர்நாடகாவில் குழப்பம்! டிகே சிவக்குமார் முன் கண்சிவந்த சித்தராமையா! அலறிய எம்எல்ஏக்கள்! பரபர தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் புதிதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் முன்பு கண்சிவந்த சித்தராமையா, எம்எல்ஏக்களை கடுமையாக திட்டியதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மே மாதம் நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவியை பெற சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தரைமையாவுக்கு முதல்வர் பதவியும், டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அந்த கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகள் கைக்கொடுத்தன. அதாவது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, டிகிரி முடித்து வேலையில்லாதோருக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், அன்னபாக்யா திட்டத்தில் 10 கிலோ அரிசி இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்தன.
இந்த 5 திட்டங்களை நிறைவேற்ற தற்போது கர்நாடகா அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக அதிகளவில் நிதி தேவை உள்ளது. இதனால் எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சில எம்எல்ஏக்கள் நிதி கேட்டு முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினர்.
இந்த கடிதம் தொடர்பாக செய்திகளும் வெளியாகின. மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் இடையே மனக்கசப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையா தலைமை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பங்கேற்றனர். அப்போது முதல்வர் சித்தராமையா எம்எல்ஏக்களை கடுமையாக கடிந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் கண்சிவந்த சித்தராமையா டிகே சிவக்குமார் முன்னிலையில் எம்எல்ஏக்களை காட்டமாக திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, ‛‛தேர்தல் வேளையில் அரசு வழங்கிய உத்தரவாத திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதனால் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. இத்தகைய சூழலில் கடிதம் எழுதி குழப்பத்தை ஏன் ஏற்படுத்துகீறர்கள். பிரச்சனைகள் இருந்தால் அதனை நேரடியாகவே கூறியிருக்கலாம்'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
மேலும், ‛‛தற்பாதைய கடித போக்குவரத்து என்பது பொதுமக்கள் மத்தியில் அரசு மீது எதிர்மறையான எண்ணத்தை விதைத்து விடும். தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் சிறிது காலம் எம்எல்ஏக்கள் பொறுப்பு அமைச்சர்களின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து தீர்த்து கொள்ளலாம். கடிதம் எழுதி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என காட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து எம்எல்ஏக்கள் இனி இதுபோன்று எதுவும் நடக்காது என தெரிவித்துள்ளார். மேலும் சித்தராமையா எம்எல்ஏக்களை திட்டிய சம்பவம் நேற்றைய கூட்டத்தை பரபரப்பாக்கியதோடு, எம்எல்ஏக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
பெங்களூரில் நாளை மாபெரும் போராட்டம்.. தமிழர்களை தமிழில் அழைத்த காக்ரோச் ஜனதா பார்ட்டி சௌரவ் தாஸ்! -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications