மெட்ரோ ரயில் பணி: பெங்களூரு ஐடி ஊழியர்கள் 2022 டிச. வரை வீட்டில் இருந்தே பணி.. கர்நாடகா அரசு முடிவு
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையான 'work from home' முறையில் ஊழியர்களை பணிசெய்ய 2022 டிசம்பர் வரை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கை கொரோனா பிரச்சனைக்காக அல்ல.. பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக.. ஏனெனில் பெங்களூரு அவுட்டர் ரிங்ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் போது ஐடி கம்பனிகள் தொடர்ந்து இயங்கினால் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை பெங்களூரு சந்திக்கும் அபாயம் உள்ளது.
அதனால் தான் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை வரும் 2022 டிசம்பர் வரை தொடர வேண்டும் என்று கர்நாடகா அரசு வேண்டுகோள் வைத்துள்ளது,

ஒஆர்ஆர் சாலை
பெங்களூரு மெட்ரோ கட்டுமானப் பணி காரணமாக கர்நாடக அரசு , தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்திற்கு (நாஸ்காம்), கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் "பெங்களூரு மாநகராட்சி சார்பில் கேஆர் புரம் வரை வெளிப்புற வளைய சாலையில் (ORR) மெட்ரோ கட்டுமானப் பணிகளைத் தொடங்குகிறது.

எத்தனை ஆண்டுகள்
இந்த கட்டுமானப்பணிகள் சுமார் 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். ORR இல் பல பெரிய தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் IT நிறுவன வளாகங்கள் உள்ளன. நாள் முழுவதும் அதிக அளவு போக்குவரத்தை கொண்டுள்ளது. ஆறு பாதைகள் மற்றும் சேவை சாலைகள் இருந்தாலும் ORR பகுதி நிரந்தரமாகவே போக்குவரத்து நெரிசலுக்கு பிரபலமானது.

ஐடி நிறுவனங்கள்
இப்போது கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனங்கள் உத்தரவிட்டதால் (டபிள்யூஎஃப்ஹெச்) பெங்களூரு அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும், அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் மெட்ரோ கட்டுமானம் தொடங்கியவுடன், அங்கு போக்குவரத்து இயக்கத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கும், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அலுவலகத்திலிருந்து வேலையை மீண்டும் தொடங்கினால் மிக கடினமாகிவிடும்.

பஸ் பாதை
அவுட்டர் ரிங் ரோடு வழியாக வேலைக்கு போகிறவர்கள் அல்லது அந்த சாலையை கடந்து செல்லும் மக்களின் போக்குவரத்திற்காக மாற்று விருப்பங்களை வழங்க பஸ் முன்னுரிமை பாதைகள் (பிபிஎல்) மற்றும் பாதுகாப்பான சுழற்சி பாதைகளை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.

work from home
பெங்களூரு orr இல் பயணம் செய்வதற்கு மாற்றுப் பயணமாக வெகுஜனப் போக்குவரத்து மற்றும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கைகளுக்குளுடன், orr இல் அமைந்துள்ள IT நிறுவனங்கள், பெரும்பாலான ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை வாய்ப்பை டிசம்பர் 2022 வரை நீட்டித்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தனி பாதை
அல்லது ஐடி பூங்காக்கள்/நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தே ஆகவேண்டிய ஊழியர்களுக்கு வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படலாம். அதேபோல் அலுவலகத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டிய ஐடி பணியாளர்கள் பேருந்துகளில் செல்ல ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த பேருந்துகளுக்கு என்றே பிரேத்யேகமாக உள்ள பாதைகளில் பயணிக்கின்றன.

கர்நாடகா அரசு
எனவே ORR இல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இது தொடர்பாக இந்த ஆலோசனையை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மெட்ரோ கட்டுமானம் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ளப்படும். இது எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்" இவ்வாறு கர்நாடகா அரசு வலியுறுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications