நீர் குறைவாக உள்ளது.. காவிரியில் தமிழகத்திற்கு ஜூனில் தண்ணீர் வழங்க இயலாது.. கை விரிக்கும் கர்நாடகா?
பெங்களூர்: கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடுவிக்கும் நிலையில் இல்லை என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டவும் கர்நாடகா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் அது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எக்காரணத்தைக் கொண்டும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட விட மாட்டோம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இந்த ஆணையத்தின் கூட்டம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான 9.1 டி.எம்.சி தண்ணீரையும் ஜூலை மாதத்திற்கான 35 டி.எம்.சி தண்ணீரையும் உரிய நேரத்தில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் ஆனால், காவிரி படுகை நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும் நீர் வரத்தும் குறைவாக இருப்பதால் பருவமழை பெய்தால் மட்டுமே நீர் திறப்பது குறித்து பரிசிலீக்கப்படும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
மேலும், தமிழகத்தில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவுக்கு உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி அணையில் 71 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இதற்கு கர்நாடகா கடந்த ஆண்டு அதிகப்படியான தண்ணீர் திறந்து விட்டதே காரணம். தற்போது இருக்கும் நீர் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்று கர்நாடகா கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும், ஜூன் மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கேட்டுக்கொண்டதாகவும் ஆனாலும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications