"தங்கம் மட்டுமே குறி.." கர்நாடக வங்கியில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை! பதற வைக்கும் சம்பவம்
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் மிகப் பெரிய ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. எஸ்பிஐ வங்கி ஒன்றில் நுழைந்த முகமூடி அணிந்திருந்த கும்பல், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது கர்நாடகா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் மிகப் பெரிய ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சடச்சன் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தான் நேற்று மாலை இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. ஆயுதம் ஏந்தியபடி உள்ளே நுழைந்த அந்தக் கும்பல், வங்கியில் மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது.

ரூ.21 கோடி கொள்ளை
ராணுவ சீருடை போன்ற உடையை அணிந்திருந்த அந்தக் கும்பலில் மொத்தம் 3 பேர் இருந்துள்ளனர். மாஸ்க் அணிந்தபடி உள்ளே நுழைந்த அவர்கள், வங்கி ஊழியர்களை மிரட்டி 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முதலில் வங்கியில் நுழைந்த அந்தக் கும்பல் வங்கி ஊழியர்களை மிரட்டி, மேனேஜர் மற்றும் பிற ஊழியர்களைக் கட்டிப்போட்டுள்ளனர். ஊழியர்களை வங்கி டாய்லெட்டில் அடைத்து, அவர்கள் அசையவே முடியாதபடி கட்டிப்போட்டுள்ளனர்.
மிரட்டல்
மேனேஜரை மட்டும் தனியாகக் கூட்டிச் சென்ற அவர்கள், பணம் இருந்த லாக்கரை திறக்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். குறிப்பாகத் தங்க நகைகளை மட்டுமே குறிவைத்துக் கொள்ளையடித்துள்ளனர். தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரையும் திறக்குமாறு மிரட்டினர். ஊழியர்கள் தயங்கிய போது, "நகையை எடு, இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்றும் சொல்லி மிரட்டியுள்ளனர்.
பிறகு கையில் கிடைத்த பணம், தங்க நகைகளைத் தங்கள் பையில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகே வங்கி ஊழியர்கள் இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சடச்சன் காவல் நிலைய கண்காணிப்பாளர் லக்ஷ்மன் நிம்பார்கி, மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
தப்பிச் சென்ற கும்பல்
முதற்கட்ட விசாரணையில் இந்தக் கும்பல் வேனில் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அந்த வேனில் இருந்த நம்பர் பிளேட் கூட போலியானது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கும்பல் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் பண்டார்பூர் நோக்கித் தப்பிச் சென்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அப்போது மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அந்தக் கும்பல் சென்றபோது, அங்கு விபத்தில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக உள்ளூர் மக்களுடன் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. அப்போது துப்பாக்கியைக் காட்டி மக்களை மிரட்டிவிட்டு, கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றனர்.
போலீஸ் சொல்வது என்ன
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "குற்றத்தைச் செய்யப் போலியான நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தப்பிச் செல்லும்போது சோலாப்பூரில் அவர்கள் சென்ற கார் டூவீலர் மீது மோதியுள்ளது. அப்போது மக்கள் திரண்டதால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்தக் கும்பல் மகாராஷ்டிராவுக்குத் தப்பிச் சென்றதால் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போலீசார் இணைந்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications