'மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது'.. பெண்களை திருப்பி அனுப்பிய தடுப்பூசி மையங்கள்.. சர்ச்சை
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரு சில தடுப்பூசி மையங்கள் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாது எனக்கூறி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு கர்நாடகா மாவட்டங்களில் ஒரு சில தடுப்பூசி மையங்களில் பெண்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வமுடன் சென்றனர்.
அப்போது தடுப்பூசி மையங்களில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், மாதவிடாய் இருக்கிறதா? என்று அந்த பெண்களிடம் விசாரித்துள்ளனர்.

தடுப்பூசி போட முடியாது
இதனை தொடர்ந்து மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாது என அந்த பெண்களை அனுப்பியுள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு வருமாறும் கூறியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களை திருப்பி அனுப்பினார்கள்
ரைச்சூர், பெலகாவி மற்றும் பிதர் மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் இவ்வாறு நடந்துள்ளதாக தெரிகிறது. மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மயக்கம், அதீத ரத்தப்போக்கு ஏற்படலாம் என்று வெளியான சில தகவல்களின் அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் அந்த பெண்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது போலியான செய்தி
ஆனால் இந்த காரணம் கூறி எந்த பெண்களும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று ராய்ச்சூர் துணை கமிஷனர் வெங்கடேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது ஒரு போலியான செய்தி என்றும் எந்த தடுப்பூசி மையங்களும் இதுபோல் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கை தகவல் மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு 5 நாட்களுக்கு முன்னும் பின்னும் கோவிட் 19 தடுப்பூசியை எடுக்கக்கூடாது என்று தவறான தகவல் வலம் வருகிறது. வதந்திகளுக்கு ஆளாகாதீர்கள்! 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என்று விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்
பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்கள் உட்பட எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய மகப்பேறியல் சமூகங்களின் கூட்டமைப்பும் கூறியுள்ளது. மாதவிடாயின்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெண்கள் தயக்கம் காட்டத் தேவையில்லை என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் ஏறகனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications