தடுப்பூசியை கண்டாலே கதவை சாத்திய கிராமத்தினர்.. செம பிளானுடன் மடக்கிய அதிகாரிகள் .. எங்க தெரியுமா?
பெங்களுரு: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.பெரும்பாலும் அனைத்து மாநில மக்களும் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் நாட்டின் ஒரு சில பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் குறித்து புரிதல் இல்லை. மலைகிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி பற்றிய தேவையில்லாத பயம் இருப்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.

கதவை பூட்டுகின்றனர்
இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்குள் அதிகாரிகள் ஒருவழியாகி விடுகின்றனர். இந்த வரிசையில் உள்ள ஒரு கிராமம்தான் காஞ்சகரஹள்ளி. இந்த கிராமம் கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அதிகாரிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என்பதை அறிந்தாலே கிராம மக்கள் அனைவரும் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குளேயே இருந்து விடுகின்றனர்.

அதிகாரிகள் வகுத்த திட்டம்
அதிகாரிகள் பலமுறை கதவை தட்டிபார்த்தும் அவர்கள் கதவை திறப்பதில்லை. ஒரு சிலர் வெளியே வந்தாலும் அதிகாரிகளை கண்டபடி திட்டி அனுப்பி விடுவார்கள். தினமும் அதிகாரிகள் காஞ்சகரஹள்ளி கிராமத்துக்கு செல்வதும், ஆனால் ஒரு தடுப்பூசி கூட போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை வகுத்தனர். அந்த கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் பதிவு செய்த நபர்களின் விவரங்களை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பெற்றனர்.

அனைவருக்கும் தடுப்பூசி
இதனை தொடர்ந்து அந்த நபர்கள் வேலை செய்யும் வயல்வெளிகள், சாலை பகுதிகள் ஆகிய இடங்களுக்கு செல்லும் அதிகாரிகள் அங்கு வைத்து அவர்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். இதன் காரணமாக கிராம வாசிகளுக்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது மட்டுமில்லாது மக்கள் கூடும் இடங்கள், மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடுகின்றனர்.

பைக்கிலும் எடுத்து செல்கிறோம்
இது தொடர்பாக யாத்கீர் மாவட்ட சுகாதார அதிகாரி இந்துமதி கூறியதாவது:- தடுப்பூசி நோய்க்கு வழிவகுக்கும் என்று கிராம மக்களிடையே ஒரு தவறான கருத்து உள்ளது. இதனால் நாங்கள் போகும்போது கதவை சாத்திக் கொள்கின்றனர். இதனால்தான் அவர்கள் வேலை செய்யும், கூடும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போட்டு வருகிறோம். கார்கள் போக முடியாத இடத்தில் பைக்கில் எடுத்து சென்றும் தடுப்பூசிகள் போட்டு வருகிறோம். அங்கு சென்று தடுப்பூசியின் நன்மை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறோம் என்று கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications