விஜயதரணிக்கு ஷாக் கொடுத்த விளவங்கோடு! காங்கிரஸிலிருந்து.. பாஜகவுக்கு தாவி போட்டியிட்டபோதும் தோல்வி!
நாகர்கோவில்: கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அப்போதைய விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த முறை பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்த நிலையில் அவர் தோல்வியடைந்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவர்தான் விஜயதரணி. வெறும் எம்எல்ஏ மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில பொறுப்புகளிலும் இருந்து பணியாற்றி வந்திருந்தார்.

இப்படி இருக்கையில்தான் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் முழுவதுமாக விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவுக்கு தாவிய பின்னர் அவர் கொடுத்த பேட்டி பரவலாக கவனம் பெற்றிருந்தது.
"காங்கிரஸ் கட்சியில் பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ மறுக்கிறார்கள். ஆனால், பாஜகவில் அப்படியான பிரச்சனை இல்லை. முத்தலாக்கில் இருந்து விடுதலை, பெண்களுக்கு சொத்துரிமை என பாஜக பெண்களுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்திருக்கிறது. அப்படியே காங்கிரஸுக்கு வந்தால், இங்கு சட்டமன்ற தலைவர் பொறுப்பு கூட தர மறுக்கிறார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், பாஜக ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று கூறியிருந்தார்.
என்னதான் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக போராடுவதாக சொல்லிக்கொண்டாலும், அக்கட்கிலிருந்து பலரும் பாஜகவுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் விஜயதரணியின் செயல்பாடு விமர்சனமாக பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், விஜயதரணி கட்சி தாவியிருந்தாலும் அவருக்கு உரிய அங்கீகாரம் எதுவும் வழங்கப்படாமல் இருந்து. குறிப்பாக அவர் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டிதான் கட்சி தாவியிருந்தார். எனவே, அவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இருப்பினும் அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில் தேர்தலில் அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்த பிரவீன் வெற்றிப்பெற்றிருக்கிறார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications