இலவசம்! உலகில் எங்கிருந்தாலும் வீட்டில் இருந்தே தமிழ் கற்கலாம்! ஜூலை மாத வகுப்பில் சேர வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: உலகில் எங்கிருந்தாலும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக தமிழ் அறக்கட்டளை பெங்களூரு சார்பில் இணைய வழியில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது. ஜூலை மாதத்துக்கான அட்மிஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

நவீன கால வாழ்க்கையில் தொழில் சார்ந்து தமிழகத்தை சேர்ந்தவர் பலரும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் தங்கி பணி செய்யும் நிலை உள்ளது.
இதனால் அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் தான் ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு'அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதன்படி உலகில் எங்கு இருந்தாலும் கூட குழந்தைகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக இணையவழியில் தமிழ் கற்கும் வாய்ப்பை ‛தமிழ் அறக்கட்டளை பெங்களூரு' ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

தற்போது ஜூலை மாதத்துக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சேர்க்கைக்கு விரும்புவோர் ஜூன் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மொத்தம் 4 படிநிலைகளில் தமிழ் கற்று கொடுக்கப்படுகிறது.

 Learn tamil with free of cost from your home anywhere on the globe, says Tamil foundation Bengaluru

முதல்படிநிலையில் அடிப்படை தமிழ் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கு கட்டணம் கிடையாது. பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வகுப்புகள் நடக்கும். இதற்கு https://forms.gle/Ah9bJ3CxSoFLFbyA9 இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இரண்டாம் படிநிலை என்பது அடிப்படை தமிழில் எழுத்துக்களை பற்றியது. இதற்கான வகுப்பு இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கும். இதற்கு கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். https://forms.gle/fMbXtNDqxBKz4MWN7 இந்த லிங்க் மூலம் விரும்புவோர் பதிவு செய்து கொள்ளலாம்.

மூன்றாம் படிநிலை என்பது சொற்றொடர் உருவாக்குதலை அடிப்படையாக கொண்டது. இதற்கு கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பானது மாை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கும். இதற்கு https://forms.gle/j3VwiVuKG2bEYXrSA இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

4ம் படிநிலை என்பது பேசுவது தமிழ் பேச்சாற்றலை வளர்க்கும் வகையில் உள்ளது. இதற்கு https://forms.gle/QMNCWzZkxfE9J5MQ8 இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 4ம் படிநிலை வகுப்பானது மாலை 4.30 மணி முத் மாலை 5.30 மணி வரை நடக்கும். இதற்கு கட்டணமாக ரூ.1,250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புவோர் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களை தமிழ் அறக்கட்டளை பெங்களூரு 9483755974, 9820281623 ஆகிய எண்களை வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். [email protected] இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+