மதரஸாக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.. இந்துகளை காப்பாற்ற அவசியம்.. சிடி ரவி பேச்சு!
பெங்களூரு: மதரஸாக்களை தடை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகி சிடி ரவி கூறியுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடாவில் உள்ள மங்களூருவில் மாவட்ட பாஜக இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சுல்லியா, கடபா மற்றும் புத்தூர் தாலுக்காக்களில் விஷ்வ இந்து பரிஷத் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது முழு அடைப்பை மீறி இயக்கப்பட்ட பேருந்துகள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

கலவரம்
அதேபோல் பிரவீன் நெட்டாரு-க்கு பாஜக தலைவர் நலின் கடீல் மற்றும் மாநில அமைச்சர் சுனில் குமார் இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது, காரை சுற்றி வளைத்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தி காரை கவிழ்க்க முயன்றனர்.

இருவர் கைது
இதனால் தக்ஷின கன்னடா மாவட்டம் முழுவதும் வன்முறைக் களமாக மாறியது. இதற்கிடையே சிக்மங்களுரூ பகுதியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் உயிரைக் காக்க கட்சி தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜினாமா செய்துள்ளார். பிரவீன் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இஸ்லாமிய இளைஞர் கைது
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடகாவில் இஸ்லாமிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே சூரத்கல் மங்களாபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது பாசில். இவர் மூடா மார்க்கெட் அருகே உள்ள செருப்பு கடைக்கு செருப்பு வாங்கச் சென்றபோது, இரு இளைஞர்கள் கத்தியால் கொலை செய்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து சூரத்கல், பனம்பூர், முல்கி, பஜ்பே ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிடி ரவி பேச்சு
இந்த நிலையில் கர்நாடகா பாஜகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சிடி ரவி, இந்தியாவில் மதரஸாக்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பாதைகள் பெரும்பாலும் மதரஸாக்களில் தான் மாற்றம் அடைகிறது. வெறுப்பு மற்றும் வன்முறையின் முக்கிய மையமாக இருக்கும் மதரஸாக்களை கட்டுப்படுத்த வேண்டும். இந்துகளை காப்பாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications