மேகதாது அணை.. உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் மனு தள்ளுபடியை வெற்றி என கொண்டாடிய சித்தராமையா!
பெங்களூர்: மேதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இது கர்நாடகாவுக்கு கிடைத்த வெற்றி என்று, பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியிருக்கிறார். மட்டுமல்லாது, அணையை கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது, "எங்கள் மாநிலத்தின் முதன்மைத் திட்டமான மேகதாது திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நமது மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாகும்.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத்துறை அனுமதி கோரும் முன்மொழிவு ஆகியவை விரைவில் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும்" என்று கூறியிருக்கிறார்.
மேகதாது திட்டம் என்றால் என்ன?
காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகாவின் கனகபுரா அருகே சுமார் ₹9,000 கோடி மதிப்பீட்டில் ஒரு அணையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கர்நாடக அரசு தனது பெரிய சட்ட வெற்றியாக கருதுகிறது. இதன் மூலம் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக கர்நாடகா நம்புகிறது.
பயன்பாடு: பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் சுமார் 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தல்.
கொள்ளளவு: சுமார் 67 டி.எம்.சி தண்ணீரைச் சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடக அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவுள்ளது. மாற்றப்பட்ட விரிவான திட்ட அறிக்கை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட புதிய திட்ட அறிக்கையைத் தயார் செய்ய அரசு ரெடியாகி வருகிறது. அணை கட்டப்படும் பகுதி வனப்பகுதியை உள்ளடக்கியது என்பதால், மத்திய அரசிடம் இதற்கான அனுமதியைக் கோர திட்டமிட்டிருக்கிறது.
தமிழகத்தின் எதிர்ப்பு
கர்நாடகா இதை வெற்றியாகக் கொண்டாடினாலும், தமிழகம் இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழகத்தின் அனுமதி இன்றி குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் வாதம். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறையும் மற்றும் விவசாயம் பாதிக்கும் என்பது தமிழக விவசாயிகளின் அச்சம்.
பட்ஜெட் தாக்கங்கள்
இந்தத் திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில் ஆரம்பக்கட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications