பெங்களூர் மழை வெள்ளம் பின்னணி.. 28 எம்எல்ஏக்களில் ரியல் எஸ்டேட்டில் 26 பேர்.. பரபரத்த நடிகை ரம்யா!
பெங்களூர்: பெங்களூர் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமுள்ள 28 எம்எல்ஏக்களில் 26 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். தற்போதைய நிலைக்கு நாம் அனைவரும் தான் காரணம். எனவே மக்கள் தேர்தலில் புத்திசாலித்தனமாக வாக்களிக்க வேண்டும் என நடிகை ரம்யா கருத்து தெரிவித்து விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு பெங்களூரும் விதிவிலக்கல்ல. பெங்களூரில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பிற ஆண்டுகளை காட்டிலும் தற்போது பெங்களூர் வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சூழ்ந்த வெள்ளம்
அதாவது ஆகஸ்ட் 30ம் இரவில் பெங்களூரில் கனமழை பெய்தபோது ஓஆர்ஆர் எனும் பெங்களூர் புறநகர் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் விடியவிடிய நகரின் பல இடங்களில் கனமழை பெய்தது. சர்ஜாபுரா, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, பெல்லந்தூர் உள்பட நகரின் முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அன்று மட்டும் 130 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ஐடி ஊழியர்கள் கடும் பாதிப்பு
எதிர்பாராத இந்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெல்லந்தூர் ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பல இடங்களில் சர்ஜாபுரா, பெல்லந்தூர் உள்பட ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் குளம்போல் சாலைகளில் வெள்ளம் நீர் தேங்கியது. இதனால் கார்கள், மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஏராளமான ஊழியர்கள் நிறுவனத்துக்கு செல்லமுடியவில்லை. இதனால் தற்போது பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

ரூ.250 கோடி நஷ்டம்
இந்த மழையின் காரணமாக ஐடி நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளன. மொத்தம் ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், மழை நீர் பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஐடி நிறுவனங்கள் பகிரங்கமாக கர்நாடக மாநில முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளன. தற்போது வரை பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை.

காரணம் என்ன?
இந்நிலையில் தான் பெங்களூர் வெள்ள பாதிப்பு நிலவரம் பெரும் பேசும்பொருளாகி உள்ளது. சரியான திட்டமிடல் இன்றி நீர்வழிப்பாதைகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே வெள்ள பாதிப்புக்கு காரணம் என பலர் கூறியுள்ளனர். மேலும் பெங்களூரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், ரியல் எஸ்டேட் தொழிலும் தான் இதற்கு காரணம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகை ரம்யா விமர்சனம்
இந்த விமர்சனத்துக்கு நடுவே தான் பெங்களூரில் உள்ள 28 எம்எல்ஏக்களில் 26 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை ரம்யா என்ற திவ்ய ஸ்பந்தனா கூறியுள்ளார். தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களில் நடித்த ரம்யா கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக இருந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் ஐடி விங்க்கின் தலைமை பொறுப்பில் இருந்த இவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

ரம்யா கூறியது என்ன?
இந்நிலையில் தான் ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று 3 பதிவுகள் செய்துள்ளார். அதில், அவர், ‛‛ பணம் உள்ளவர்களுக்கு மட்டும் (ரியல் எஸ்டேட்) போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படுவது ஏன்?. ஒரு எம்எல்ஏவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு ரூ.40 லட்சம் எனும்போது தேர்தல் ஏன் கோடிகளில் நடக்கிறது?. இதற்கான விடை இங்கு உள்ளது.

28 ல் 26 எம்எல்ஏக்கள்...
கர்நாடகத்தில் எத்தனை எம்எல்ஏக்கள், எம்பிகள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் தெரியுமா?. இதுபற்றி ஒருவர் பெங்களூரில் 28 எம்எல்ஏக்களில் 26 பேர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறினார். இது திகைப்பூட்டும் எண்ணிக்கையாக உள்ளது. இந்த 26 எம்எல்ஏக்களும் மக்களின் விருப்பம் தான். இதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே தயவுசெய்து ஒவ்வொருவரும் முதலில் வாக்களியுங்கள். முக்கியமாக புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். ஏனென்றால் நகர்புறங்களில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இதனால் கோபம் ஏற்படுகிறது. நமது தற்போதைய நிலைக்கு நாம் அனைவரும்தான் காரணம்.'' என கூறியுள்ளார்
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications