சித்தராமையாவுக்கு இடி.. ரூ.100 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.. மூடா ஊழல் வழக்கில் அதிரடி
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு மூடா ஊழல் வழக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை ஒரு புறம் நடந்து வரும் நிலையில், சித்தராமையாவின் ரூ.100 கோடி சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை இந்த வழக்கில் சித்தராமையாவின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது மனைவியான பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் (மூடா) நிறுவனமானது 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக இந்த 14 வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முடா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், சித்தராமையாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
92 சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.100 கோடியாகும். இந்த வழக்கில் இதுவரை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும், வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் மூடா அதிகாரிகளின் பினாமி சொத்துக்கள் என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், " அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ள இந்த 92 இடங்களும், ஏற்கனவே முடக்கப்பட்ட சுமார் 300 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 160 மனைகளின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications