கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு 4.5 கோடியில் வைரகிரீடம் வழங்கிய இளையராஜா.. நெகிழ வைத்த பின்னணி
பெங்களூர்: இளைஞானி இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் அம்மனுக்கு ரூ.4½ கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். தனது வாழ்க்கையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனால் தான் அதிசயம் நடந்ததாக இளையராஜா பலமுறை கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலாகும். இந்த கோயில் சக்தி தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக உள்ள ஸ்ரீ மூகாம்பிகை அம்மன். இவர் சரஸ்வதி, லட்சுமி, மற்றும் பார்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார்.

மூகாசுரன் என்ற அரக்கனை இந்த தேவி வதம் செய்ததால், மூகாம்பிகை என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆதி சங்கரர் இக்கோயிலுக்கு வந்தபோது, இங்கிருந்த அம்மன் மீது மிகவும் ஈர்க்கப்பட்டு, மூகாம்பிகை அம்மனின் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்ததாக வரலாறுகள் உள்ளது. மிகவும் கலைநயம் மிக்க இக்கோயிலில் கருங்கல்லினால் செதுக்கப்பட்ட பல சிலைகள் உள்ளன. கோயிலின் கருவறை மிகவும் சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது.
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி அம்மனை வழிபடுவார்கள். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தினமும் வருவார்கள். தென் மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள பக்தர்கள் அடிக்கடி வருவார்கள்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படி என்றால், இளையராஜாவிற்கு இஷ்ட தெய்வமாகும். இந்நிலையில் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதயொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி இளையராஜா பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில் இளையராஜா நேற்று உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் அம்மனுக்கு ரூ.4½ கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கினார். மேலும் வீரபத்ர தேவர் சாமிக்கு வெள்ளி கிரீடமும், வாளையும் காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.
முன்னதாக இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோவிலை சுற்றி ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டது. பின்னர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடத்தை இளையராஜா வழங்கி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அப்போது அவர் மனம் உருகி அம்மனை வேண்டினார். தனது வாழ்க்கையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனால் தான் அதிசயம் நடந்ததாக நம்பி வரும் இளையராஜா, இதனால் அம்மனை தரிசிக்க பலமுறை இளையராஜா வந்துள்ளார். அதன்படி தற்போது அவர் சினிமாவில் பொன்விழா கொண்டாடும் நிலையில் கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைரகிரீடத்தை காணிக்கை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications