Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛என் மகனை நான் கொல்லவில்லை’.. போலீசிடம் கதறும் சுசானா சேத்.. நாடகத்துக்கு செக் வைத்த பிரேத அறிக்கை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தின் சிஇஓவான சுசானா சேத் தனது 4 வயது மகனை கொன்ற வழக்கில் போலீசில் சிக்கி உள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் மகனை தான் கொல்லவில்லை என குற்றத்தை மறுத்து வரும் நிலையில் அவரது நாடகத்துக்கு பிரேத அறிக்கை செக் வைத்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுசானா சேத். இவர் பெங்களூரில் வசித்தபடி செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் மைண்ட் புல் கம்பெனி.

My son died suddenly so i did not kill him, arrested Bangalore CEO Suchana Seth tells to police

இவருக்கு கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவரின் பெயர் வெங்கட்ராமன். இந்த தம்பதிக்கு கடந்த 2019ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 4 வயது ஆகிறது.

இந்நிலையில் தான் கருத்து வேறுபாடு காரணமாக சுசானா சேத்-வெங்கட்ராமன் தம்பதி பிரிந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு பெங்களூர் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தான் கோவாவில் உள்ள ஹோட்டலில் தங்கிய சுசானா சேத் தனது 4 வயது மகனை கொன்று உடலை பேக்கில் வைத்து வாடகை காரில் பெங்களூர் நோக்கி வந்தபோது போலீசில் சிக்கி உள்ளார்.

பெங்களூர் சிஇஓ சுசனா சேத்.. 36 மணி நேரம் முன்பு என்ன செய்தார்? டாக்டர்கள் சொன்ன திடுக் தகவல்கள்

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஐமங்களா போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரது 4 வயது மகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு உடல் தந்தையான வெங்கட்ராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் இன்று இறுதி சடங்குடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே தான் சுசானா சேத்தை கோவா போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின்போது சுசானா சேத் தனது குழந்தையை கொல்லவில்லை என அழுதபடி கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் கூறியதாவது: ‛‛சுசானா சேத் தனது குழந்தையை கொல்லவில்லை என கூறுகிறார். குழந்தை மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், ஹோட்டல் அறையில் குழந்தை தூங்கியபோது அப்படியே இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குழந்தை இறந்த துக்கத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அதனால் தான் ஹோட்டல் அறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கோவா: 4 வயது குழந்தை கொலை-பெங்களூர் பெண் சிஇஓ கைது-உலகின் AI பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்!

ஆனால் குழந்தையின் பிரதே பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதோடு குழந்தை தலையணை அல்லது வேறு பொருளால் முகத்தை அழுத்தி கொலை செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுசானா சேத் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சுசானா சேத் தங்கியிருந்த அறைக்கு வேறு யாரும் செல்லவில்லை. குழந்தை முழுக்க முழுக்க சுசானா சேத் கட்டுப்பாட்டில் தான் இருந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்து இருக்கலாம்’’ என்றனர்.

மேலும் போலீஸ் விசாரணையின்போது இன்னொரு தகவலும் வெளியானது. அதாவது சுசானா சேத் மற்றும் வெங்கட்ரமணாவின் விவாகரத்து வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்திய விசாரணையின்போது பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது ஞாயிற்றுக்கிழமை வெங்கட்ரமணா குழந்தையுடன் பேச அனுமதி வழங்கியது. இதையடுத்து வெங்கட்ரமணா ஞாயிற்றுக்கிழமைகளில் செல்போனில் வீடியோ கால் மூலம் குழந்தையுடன் பேசிவந்துள்ளார்.

ஆனால் இதனை சுசானா சேத் விரும்பவில்லை என கூறப்படுகிது. இதனால் குழந்தையை சுசானா சேத் கோவா ஹோட்டலில் வைத்து கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+