மைசூருவில் பயங்கர விபத்து.. கார் - பஸ் மோதி 10 பேர் பலி.. காருக்குள்ளேயே நசுங்கிய உடல்கள்.. கொடூரம்
பெங்களூரு: மைசூரில் நடந்த சாலை விபத்தில் 10 பேர் உடல்நசுங்கி உயிரிழந்துள்ளது பெருத்த சோகத்தை தந்து வருகிறது.. இந்நிலையில் இந்த கோர விபத்தின் வீடியோ காட்சியும் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மைசூரில் இருந்து கொன்னேகால் பகுதிக்கு, சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸூம், கொன்னேகால் என்ற பகுதியில் இருந்து, எதிரே வந்து கொண்டிருந்த யுனோவா காரும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன..

அப்பளம்போல் நொறுங்கியது:
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. யுனோவா காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், செல்லும் வழியிலேயே மேலும் 2 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது..
மேலும் பலர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. இனோவா கார் அதிவேகமாக இயக்கப்பட்டதே இந்த கோர விபத்துக்கு காரணம் என்று முதல்கட்டமாக தகவல் வெளியானது..
வாடகை கார்:
விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். காரில் வந்தவர்கள், பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து பெங்களூருவுக்கு டூர் வந்திருக்கிறார்கள்.. பிறகு, பெங்களூருவிலிருந்து, வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு, காம்ராஜ் நகர் மாவட்டத்தை சுற்றிப்பார்த்து விட்டு, மறுபடியும் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும், அந்த காரில் 13 பேர் வந்ததாக சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? என்ற அதிர்ச்சி கேள்வியும் எழுந்து வருகிறது. போலீசார் இது சம்பந்தமான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். விபத்துக்குள்ளான அந்த இன்னோவா காரில் இருந்து ஒருவர் மட்டும் உயிர் தப்பியிருக்கிறாராம்.. அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
யார் அவர்கள்: கொள்ளேகால தீமரீஸ் புறா நெடுஞ்சாலை குறுபூறு அருகில் இந்த விபத்து நடந்துள்ளது. அவர்களது பெயர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை உறுதியாக தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மஞ்சுநாத் 35, பூர்ணிமா 30,பவன் 10, கார்த்திக் 8, சந்துப் 24, சுஜாதா 40, கோத்ரேஷ் 45, காயத்ரி 35, ஷ்ராவ்யா 3, மற்றும் டிரைவர் ஆதித்யா ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவர்.. சாக்ஷிகுமார், புனீத், ஜனார்த்தன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். அநேகமாக இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தாறுமாறாக ஓடிய கார்:
இந்நிலையில், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அந்த வீடியோவில், இனோவா கார் நடுரோட்டில் தாறுமாறாக அதேசமயம், படுஸ்பீடாக வருகிறது.. அந்த வேகத்துடன்தான் எதிரே வந்த பஸ் மீது பலமாக மோதுகிறது.. இதில் அந்த இடமே தூள் தூளாக சிதறிப்போய் காணப்படுகிறது.. சேதம் அடைந்த காரில், உயிரிழந்த பயணிகளின் உடல் சிக்கியிருப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது..
சமீப காலமாகவே, பெங்களூரு-மைசூர் விரைவு சாலையில் விபத்துகள் நிறைய நடந்து வருகின்றன.. கடந்த மார்ச் மாதம் 12ம் தேதிதான், பெங்களூரு-மைசூர் விரைவு சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்... இந்த சாலை திறக்கப்பட்ட அதே நாளிலேயே மத்தூர் அருகே விபத்து ஒன்று நடந்தது.. இதற்கு பிறகும்கூட, விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்..
தொடரும் சோகம்:
அதுட்டுமல்ல, பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் கடந்த 6 மாதங்களில் 335க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு, 84க்கும் மேற்பட்டோர் பரிதாப உயிரிழந்துள்ளனர்.. இன்று நடந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து, பொதுமக்கள் இன்னும் மீளவில்லை.
பிரதமர் நிதியுதவி:
இந்நிலையில், கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications