5 வருட பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை.. நாடு அமைதியாக உள்ளது.. மோடி பெருமிதம்!
கடந்த ஐந்து வருட பாஜக ஆட்சியில் நாட்டில் பெரிய தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
பெங்களூர்: கடந்த ஐந்து வருட பாஜக ஆட்சியில் நாட்டில் பெரிய தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தேர்தலுக்காக தீவிரமாக் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பெங்களூரில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.
இந்த பிரச்சாரத்தில் அவர் இந்திய ராணுவம் குறித்து பேசினார். அதேபோல் தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் பேசினார்.

காங்கிரஸ் ஆட்சி
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது பேச்சில், காங்கிரஸ் தனது ஆட்சியில் இந்திய பாதுகாப்பிற்காக எதுவும் செய்யவில்லை. நாங்கள் வானத்தில் கூட இந்தியாவின் பாதுகாப்பை நிலைநாட்டினோம். மிஷன் சக்தி மூலம் இந்தியாவின் பாதுகாப்பை விண்வெளியில் உறுதி செய்தோம்.

காங்கிரஸ் திறமை
மிஷன் சக்தியை காங்கிரஸ் ஏற்கனவே செய்துவிட்டோம். ஆனால் ரகசியமாக வைத்து இருந்தோம் என்று கூறியது. ஆனால் காங்கிரஸ் அதை செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதற்கான திறமை எல்லாம் இல்லை. அவர்களின் ஆட்சியில் இந்தியாவின் வலிமை மிகவும் குறைவாக இருந்தது.

சாதனை இல்லை
அதனால் காங்கிரஸ் கட்சியால் இந்தியாவின் சாதனைகள் என்று எதையும் சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் வரிசையாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. நாடே அச்சத்தில் இருந்தது. பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்கினார்கள்.

நடக்கவில்லை
ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் கூட பாஜக ஆட்சியில் நடக்கவில்லை. காவலர்கள் ஆட்சியில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை. தீவிரவாதிகளின் மீது அச்சம் இல்லாமல் மக்கள் சந்தோசமாக வசித்து வருகிறார்கள், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications