Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 சதவீத கமிஷன்.. கர்நாடக பாஜக அரசுக்கு சிக்கல்.. ‛‛PayCM’’ என பெங்களூரில் போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் ஊழல் குறித்து மக்கள் புகாரளிக்க காங்கிரஸ் கட்சி இணையதளம் துவங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக ‛‛PayCM'' எனும் பெயரில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் பெங்களூரில் பேடிஎம் வடிவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் துவங்கிய ஊழல் புகார் தொடர்பான இணையதளத்துக்கு செல்கிறது. இதன்மூலம் பாஜக அரசுக்கு காங்கிரஸ் குடைச்சல் கொடுத்து வருகிறது.

பாஜக அரசு 40 சதவீத கமிஷன் பெற்று செயல்பட்டு வருவதாக தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வரும் நிலையில் தான் இந்த வித்தியாசமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் கடந்த 2018ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 சட்டசபை தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் அப்போதைய தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு எந்த கட்சியும் வெற்றிபெறவில்லை. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் தளம் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்றார். ஆனால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

 3வது முதல்வர் பொம்மை

3வது முதல்வர் பொம்மை

அதன்பிறகு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. முதல்வராக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி பொறுப்பேற்றார். இதற்கிடையே தான் 10க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்தது. எடியூரப்பா முதல்வரானார். அதன்பிறகு அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு

40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு

இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை முதல்வராக ஆனதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றனர். ஹிஜாப் விவகாரம், முஸ்லிம் வியாபாரிகளை கோவில்களில் கடை அமைக்க விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. மேலும் பசவராஜ் பொம்மையின் அரசு 40 சதவீத கமிஷன் பெற்று ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை இழந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக கர்நாடக பாஜக அரசு மீது ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்து வருகின்றது.

இணையதளம் துவங்கிய காங்கிரஸ்

இணையதளம் துவங்கிய காங்கிரஸ்

இதுதொடர்பாக அவ்வப்போது ட்விட்டரில் இருகட்சி தலைவர்களும் வார்த்தைபோரில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக ஆளும் பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. இதற்கு பாஜகவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் சமீபத்தில் ஊழல் தொடர்பாக புகார் அளிக்க ‛40 சதவீத கமிஷன் அரசு' எனும் பெயரில் 40percentsarkara.com இணையதளத்தை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது.

PayCM போஸ்டர்

PayCM போஸ்டர்

இந்நிலையில் தான் தற்போது பேடிஎம் ஸ்கேனர் போன்று PayCM எனும் தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் 40 சதவீத கமிஷன் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பசவராஜ் பொம்மையின் படம் QR கோட் வடிவில் உள்ளது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால் பாஜக அரசின் ஊழல் தொடர்பான புகாருக்காக காங்கிரஸ் கட்சி துவங்கிய இணையதளத்துக்கு செல்கிறது. இதன்மூலம் பாஜகவுக்கு எதிராக நூதன பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+