தமிழ்நாட்டை பார்த்து நாடே சிரிச்சாச்சு.. 6 மாத ஆட்சி நாசமா போச்சு! நடிகை வெளியிட்ட வீடியோ
சென்னை: முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்து 6 மாதம் கடந்துவிட்ட நிலையில் நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது என்று நடிகையும், சமூக ஆர்வலருமான ரேகா சிவன் வெளியிட்ட வீடியோ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் தமிழ்நாட்டைப் பார்த்து நாடே சிரிச்சாச்சு, ஆறு மாத ஆட்சி நாசமா போச்சு என்று பேசி இருக்கிறார். அதோடு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, குழந்தைகள் கடத்தல் போன்ற பல விஷயங்களை பற்றியும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

நடிகை ரேகா சிவன் வீடியோ
ரேகா சிவன் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அமைச்சர் ராஜ்மோகன் ஆண்மை பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருந்தார். இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாத காலத்தில் நாடே மாறி போயிடுச்சு என்று அவர் சொல்லி இருக்கிறார். அதாவது அவருடைய வீடியோவின் ஆரம்பத்திலேயே, பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை.. பண்போடு வாழ்ந்திருந்தால் பாவம் இல்லை என்று ஒரு பாடல் உண்டு, நம்முடைய கலாச்சாரங்கள் பெருமையை பார்த்து பலர் நம்முடைய நாட்டில் பொண்ணு எடுக்க ஆசைப்படுவாங்க. ஆனா இப்போ தமிழ்நாட்டில் உள்ளே இருப்பவர்களே வாழுறதுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.
பலருக்கு இருக்கும் பயம்
பலர் நம்முடைய ஊரு பசங்களுக்கு பெண்களை கட்டி தர ஆசைப்படுவாங்க. ஆனா இப்போ யாருமே நம்ம நாட்டுக்கு வரணும் என்றாலே யோசிக்கிறாங்க. உங்க நாட்டுக்கு வரணும் என்றால் பெயில் வாங்கணுமா என்று கேக்குறாங்க. ஏன்னா இங்க இருக்கிற நிலைமை. எதை பேசினாலும், எதைக் கேட்டாலும் ஃபேட் செக் பண்ண வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சில நேரங்களில் நம்மையே செக் பண்ண கூட்டிட்டு போயிருவாங்க போல அப்படி இருக்கிறது. அந்த அளவிற்கு நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகள்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சாச்சு, விலைவாசி கூடியாட்சி, ஜிஎஸ்டி வரி கூடிப்போச்சு, காவிரியில் தண்ணீர் வராமல் போச்சு, டெல்டா காய்ந்து போச்சு, குருவை சாகுபடி நாசமா போச்சு, செஞ்சி சிறுமி காணாமல் போச்சு, போதைப்பொருள் கடத்தல் செஞ்சாச்சு, காவல்துறைக்கு கத்தி குத்து விழுந்தாச்சு, ஜெயில் கைதிகள் தப்பி ஓடி ஆச்சு, பட்டினம்பாக்கம் காலி ஆச்சி, ஏர்போர்ட் தனியாருக்கு தாரை வாத்தாச்சு, பெண்கள் பாதுகாப்பு சந்தி சிரிச்சாச்சு, இப்போ கலெக்டருக்கும் வீட்டுக்கு சென்று சில்மிஷம் செஞ்சாச்சு இப்படி நாடு சிரியா சிரிச்சுக்கிட்டு இருக்கும்போதும் எங்க அண்ணன் எதுவும் செய்ய மாட்டாரு.
நான் இப்போ சொன்னதெல்லாம் கொஞ்சம் தான் இன்னும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என்று எவ்வளவோ வேலை பண்ணிட்டு இருக்குறாங்க. தமிழ்நாட்டில் மொத்தத்தில் 6 மாசத்தில் நாசமா போச்சு என்று அந்த வீடியோவில் ரேகா சிவன் பேசி இருக்கிறார். இதை வைத்து இப்போ விவாதமும் வெடித்துக் கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications
