மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கல் வைக்காத நகைகள் கொள்ளை! சிங்கிளாக வந்து சாவகாசமாக திருடிய கொள்ளையன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் 35 கிலோ தங்க நகைகளை ஒரே ஆளாக வந்த நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கற்கள் பதித்த நகைகளை விற்றால் கற்களின் கழிவுகள் போக பணம் குறைவாக கிடைக்கும் என்பதால் கற்கள் பதிக்காத நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறியிருப்பதாவது: மதுரை தனிஷ்க் நகைக் கடையில் தரைதளத்தில் நகைகள் இருந்ததால் அங்கு சென்ற கொள்ளையன் நகைகளை அள்ளி சாக்கு பையில் போட்டுள்ளார். ஒரு மணி நேரமாக நிறுத்தி நிதானமாக நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

madurai tanishq jewellery

அதிலும் ஒரே ஆளாக வந்துள்ளார். கற்கள் பதித்த நகைகளாக இருந்தால் விற்பனை செய்தால் பணம் குறைவாக கிடைக்கும் என்பதால் கற்கள் பதிக்காத நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இந்த கொள்ளையனை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரும்பு சாரத்தில் ஏறி மொட்டை மாடி ஜன்னல் வழியாக வந்த கொள்ளையன், லிப்ட்டை தாங்கும் இரும்பு கம்பிகளை பிடித்துக் கொண்டு கடையின் தரைதளத்திற்கு வந்தார். அங்கிருந்த நகைகளை அள்ளிக் கொண்டு நேதாஜி மெயின் ரோடு வழயாக சென்றுவிட்டார்.

கடையின் 2ஆவது தளம் காலியாக உள்ளது. 3ஆவது தளத்தில் நகைகளை பாதுகாக்கும் பெட்டகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இவ்வாறு போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையன் உடல் முழுவதும் கருப்புத் துணி, முகமூடி, கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+