Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி அலையால் கலங்கும் காங்கிரஸ்.. கர்நாடகாவில் பாஜகவை கரை சேர்க்கும் பிரதமர்? சர்வேயில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் உள்ளூர் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை காட்டிலும் பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. மேலும் பிரதமர் மோடிக்காக பாஜகவுக்கு ஓட்டு செலுத்த மக்கள் தயாராக இருக்கும் தகவல் டிவி 9- சி வோட்டர் கருத்து கணிப்பில் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மாறாக தற்பாதைய ஆட்சியை அப்படியே தக்க வைக்க வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் சில கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு, சில காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமாக உள்ளன. ஆனால் பெரும்பாலான கருத்து கணிப்புகள் என்பவை தொங்கு சட்டசபை அமையும் என்றே தெரிவிக்கின்றன.

PM Modi emerges as more influential figure than local candidates, says TV 9 Kannada and C Voter Survey

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலுக்கு முந்தைய புதிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. டிவி 9 மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டது. மக்கள் அளித்த பதிலின் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் டிவி 9-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதாவது, ‛‛பிரதமர் மோடி அல்லது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோரில் யாரை பார்த்து ஓட்டளிப்பீர்கள்'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மக்கள் அளித்த பதில் என்பது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது 46.4 சதவீதம் பேர் பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து தான் ஓட்டளிப்பதாக தெரிவித்துள்ளனர். மாறாக தொகுதியின் வேட்பாளர் என 20.7 சதவீதம் பேரும், இதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என 32.9 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். இதன்மூலம் கர்நாடகாவில் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை காட்டிலும் பிரதமர் மோடியை அடிப்படையாக வைத்து தான் மக்கள் ஓட்டளிக்க உள்ளது தெரியவந்துள்ளது.

இதன்மூலம் கர்நாடகா தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு என்பது மக்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இது தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான சூழல் இருப்பதாக பல அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கும் நிலையில் இறுதிக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் வியூகம் கர்நாடகாவில் தாமரையை மீண்டும் மலர செய்துவிடுமோ? என்ற கேள்வியால் கதர் கட்சியின் தலைவர்கள் கலங்குகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+