இரு கண்களும் தானம்.. இறந்த பிறகும் புனித் ராஜ்குமார் செய்த புனித செயல்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பெங்களூரு: கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் எனப்படும் புனித் ராஜ்குமார் இன்று திடீரென மரணம் அடைந்தது கன்னட திரையுலகை மட்டுமில்லாது, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
ஜிம்மில் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த புனித் ராஜ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பெங்களூரூவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அரசு மரியாதையுடன்...
புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா, விளையாட்டு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமானம்மிக்கவர்
மறைந்த புனித் ராஜ்குமார் பல்வேறு உதவிகள் செய்து வந்த மனிதாபிமானம் மிக்கவர் என்று கூறப்படுகிறது. ஏழை, எளிய குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக தனது சொந்த செலவில் பள்ளிகளை நடத்தி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இறந்த பின்னரும் புனித் ராஜ்குமார் செய்த செயலை கண்டு அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கண்தானம் செய்துள்ளார்
அதாவது அவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். அந்த கண்களும் பெங்களூரூவில் உள்ள நாராயணநேத்ராலயா கண் வங்கியில் சேமிக்கப்பட்டது. புனித்தின் தந்தை ராஜ்குமார் அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் அவரது மகன்கள், 'ராஜ்குமார் பெயரில் அறக்கட்டளை தொடங்கினர்.

தந்தை போலவே...
தற்போது புனித் ராஜ்குமார், தனது தந்தை ராஜ்குமார் போல் கண்களை தானம் செய்துள்ளார். தான் கண் தானம் செய்வதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே புத்தக வெளியீட்டு விழாவில் புனித் ராஜ்குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications