Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்.. குடும்ப டாக்டர் ரமண ராவ் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது, என்ன நடந்தது என்பது குறித்து அவரது குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

நடிகர் புனித் ராஜ்குமார் "கார்டியாக் அரெஸ்ட்" காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். அவரது உடல் இன்று அரசு முறைப்படி நல்லடக்கம் செயய்ப்பட்டது. கன்னட பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் 46 வயதில் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கிய விஷயத்தில் அவர் எப்போதும் அலட்சியம் காட்டியது இல்லை. அவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கும் என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படவில்லை.

ஏனெனில் அந்த அளவிற்கு உடலை நல்ல நிலையில் வைத்திருந்தார். துரதிஷ்டவமாக புனித் ராஜ்குமார் இறந்து போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ரசிகர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். புனித் ராஜ்குமார் மரண செய்தி கேட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தையே அவரது மரணம் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதிகப்படியான வியர்வை

அதிகப்படியான வியர்வை

புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும் போது, "நடிகர் புனித் ராஜ்குமார் தனது மனைவி அஸ்வினியுடன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் எனது மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு அதிகப்படியான வியர்வை ஏற்பட்டிருந்தது.

உடல் சோர்வு

உடல் சோர்வு

ஏன் வியர்வு அதிகமாக உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், நான் இப்போது தான் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன். அதனால் வியர்க்கிறது. ஆனால் எனக்கு உடல் சோர்வாக உள்ளது, என்ன என்று தெரியவில்லை என்று என்று என்னிடம் கூறினார்.

இசிஜி எடுத்தேன்

இசிஜி எடுத்தேன்

புனித் ராஜ்குமார் இதற்கு முன்பு இப்படி உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி என்னிடம் வந்ததே கிடையாது. முதல் முறையாக அவர் என்னிடம் இவ்வாறு வந்து கூறினார். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு இ.சி.ஜி.(இதயத்துடிப்பு) பரிசோதனை செய்தேன். அதில் அவரது இதய செயல்பாட்டில் சிறிது மாறுபாடு இருந்தது.

விக்ரம் மருத்துவமனை

விக்ரம் மருத்துவமனை

ஆனால் அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அதற்காக முன்கூட்டியே ஒரு மருத்துவ குழுவை தயாராக வைக்கும்படி விக்ரம் மருத்துவமனைக்கு தெரிவித்தும் இருந்தேன்.

கார்டியாக் அரெஸ்ட்

கார்டியாக் அரெஸ்ட்

அடுத்த 5 நிமிடத்தில் அவர் விக்ரம் மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது. மாரடைப்பு ஏற்பட்டால், அதனால் அதிகப்படியான வலி ஏற்படும். ஆனால் அவருக்கு வலி இருக்கவில்லை. ஆனால் "கார்டியாக் அரெஸ்ட்" ஏற்பட்டிருக்கிறது. அதாவது இதய துடிப்பே நின்று போய் உள்ளது. அது தான் அவருக்கு அந்த சமயத்தில் ஏற்பட்டுள்ளது.

அலட்சியம் இல்லை

அலட்சியம் இல்லை

அவர் ஒரு சாதாரண நபர் கிடையாது. தினசரி உடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில் அக்கறை செலுத்தி வந்தவர். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அவர் எப்போதும் அலட்சியம் காட்டியது இல்லை. அவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கும் என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவுக்கு அவர் ஆரோக்கியமாக இருந்தார்.

காரில் போகும் நடந்தது

காரில் போகும் நடந்தது

அவருக்கு திடீரென இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனையில் அவர் மயங்கி விழவில்லை. பரிசோதனையின்போது, அவரது இதய துடிப்பு சரியாகவே இருந்தது. பரிசோதனைக்கு பிறகு அவர் நடக்க சிரமப்பட்டார். என்னிடம் பேசும்போது சரியாகவே பேசினார். காரில் அழைத்து செல்லுமாறு கூறினேன். காரில் செல்லும்போது தான் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று ரமணராவ் கூறினார்.

மாரடைப்பு அல்ல

மாரடைப்பு அல்ல

இதன் மூலம் காரில் சென்றபோதுதான் புனித் ராஜ்குமாருக்கு "கார்டியாக் அரெஸ்ட்" என்று அழைக்கப்படும் இதய துடிப்பே நின்று போகும் செயல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு இல்லை என்பது மருத்தவரின் பேட்டியில் தெரிகிறது. மாரடைப்பு ஏற்பட்டால் வலி ஏற்படும் என்றும் ஆனால் அவருக்கு இதய துடிப்பே இன்று போய்விட்டதால் தான் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+