“தீண்டாமை”.. ஊரைவிட்டு ஒதுக்கிய “சாதி” வெறியர்கள்! தலித் குடும்பத்தை யாத்திரை அழைத்துச் சென்ற ராகுல்
பெங்களூரு: கர்நாடகாவில் கோயில் கம்பத்தை தொட்ட காரணத்துக்காக சாதி வெறியர்களால் அபராதம் விதிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் குடும்பத்தினரின் தோள் மேல் கைபோட்டு ராகுல் காந்தி நடைபயணம் அழைத்து சென்றார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். தற்போது அவர் கர்நாடகாவில் நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பயண விபரம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கர்நாடகாவில் யாத்திரை
கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிலிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

கவனம் ஈர்க்கும் ராகுல்
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்தும் கூட்டங்களில் பேசியும் வருகிறார். சில நாட்களுக்கு முன் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேசிய படங்களும், பாத யாத்திரையில் பங்கேற்ற சோனியா காந்திக்கு ராகுல் காந்தி காலணி மாட்டிவிடும் காட்சியும் அதிகளவில் பகிரப்பட்டது.

தலித் குடும்பம்
இதேபோல் பல்வேறு தரப்பட்ட மக்களுடன் ராகுல் காந்தி நடந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தும்கூரில் இருந்து சித்ரதுர்கா நோக்கி நடைபயணம் சென்ற ராகுல் காந்தி கோலாரை தலித் குடும்பத்தினரின் தோள் மேல் கை வைத்து அழைத்து சென்றார்.

சாதி கொடுமை
தலித் குடும்பத்தை சேர்ந்த ஷோபனாவின் மகன், கோயில் கம்பத்தை தொட்டதற்காக அவர்களுக்கு அபராதம் விதித்து, குடும்பத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தார்கள் சாதி வெறியர்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர்களை தங்களோடு அழைத்துச் சென்று தார்மீக ஆதரவை வழங்கிய ராகுல் காந்தி தலித் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications